தூத்துக்குடி லீக்ஸ் 12-7-2023
செய்தி புகைப்படங்கள்:- த.சண்முகசுந்தரம்
(மூத்த பத்திரிகை யாளர்)
.
தமிழக அரசின் நிர்வாகத்துறையின் கீழ் வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் இயங்கும் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது.
2021 ல் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் ... தற்போது தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கு பொறுப்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்களாக செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி, மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காலர்களாக கீதா செல்வமாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நியமன ஆணை வழங்கினார்.
தேர்தல் தேர்வு
தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில் செயல் அலுவலர் குலசை ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் ருக்மணி ஆகியோர் அடங்கிய குழுக்கள் மூலம் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.
அதில் கோவில் அறங்காலர்களாக உள்ள செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி வாக்களித்தனர். அதில் அறங்காவல்குழு தலைவராக செல்வசித்ரா அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி, 2 ம் ரயில்வே கேட் மேலூர் பத்திரகாளியம்மன் கோவிலில் வைத்து நடைபெற்ற தேர்வில் அறங்காலர்களாக உள்ள கீதா செல்வமாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா ஆகியோர் வாக்களித்தனர்.
அதில் அறங்காவல்குழு தலைவராக கீதா செல்வமாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இரு ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று, பிரசாதங்கள் வழங்கப்பட்டனர்.
பின்னர் பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கந்தசாமி மற்றும் கோபால் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக