செவ்வாய், 11 ஜூலை, 2023

தூத்துக்குடி வழக்கறிஞர் கிறிஸ்டோபர் கோரிக்கை அரசுஅதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

thoothukudi leaks 12-7-2023

news by arunan



 வழக்கறிஞர் கிறிஸ்டோபர் தூத்துக்குடி மக்களுக்காக  அவசர கோரிக்கை வைத்துள்ளார்.தூத்தக்குடி  அரசுஅதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறார்.


இது பற்றிய செய்தியாவது:-:

தூத்துக்குடி மாவட்டம்  புதுக்கோட்டை அருகே திருநெல்வேலி- தூத்துக்குடி 

 நான்கு வழிச்சாலையில் புதிதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

பாலத்தின் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது மக்கள் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு எளிதாகக் கடந்து சென்றனர்.

 ஆனால் பாலம் வேலை முடிந்து இப்பொழுது பாலத்தில் அதிவேகமாக வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கிறது.


 இந்நிலையில் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்க சர்வீஸ் ரோட்டிற்கு செல்ல மக்கள் மிக கவனமாக கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது மக்களோ வாகனமோ மேற்கண்ட படி கடந்து செல்ல தற்போது போதிய ஒழுங்குமுறை இல்லை  முன்பு பாலம் வேலை நடைபெற்றது.

அப்போது  உடைக்கப்பட்ட வழிகளிலே  வாகனங்கள் கடந்து செல்கின்றன இதனால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்

 வக்கீல் செல்வம் கிறிஸ்டோபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக