செவ்வாய், 11 ஜூலை, 2023

தனித்தனியாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆய்வுகள் செய்த அமைச்சர் கீதா ஜீவன் - மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி லீக்ஸ் 12-7-2023

செய்தி புகைப்படங்கள் த.சண்முகசுந்தரம் 

()

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் & மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடர்ந்து தனித்தனியாக ஆய்வுகள் பணிகளில் ஈடுபட்டு தூத்துக்குடி நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சீக்கிரம் கிடைத்திட துரித படுத்தி வருகிறார் கள் 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் & மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு  செய்து அப்பணியை செய்து வருபவர்கள் பொதுமக்கள் பயன்படும்வாறு பணி நடைபெற்று வருகிறததா எனவும் இடையூறு இன்றி வேலைகள் நடைபெறவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார் கள்.


இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி

13வது வார்டுக்குட்பட்ட தனசேகரன் நகர் மேற்கு 4, 5, 6 ஆகிய பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. 

அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு


அப்பணியை வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமார், மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

அடுத்து...

சென்ற ஆண்டுகளில் மழைநீர் தேங்கிய பகுதியான தூத்துக்குடி  மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை சாலையில் நடைபெற்று வரும் புதிய வடிகால் கட்டுமானப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி  ஆய்வு செய்தார்.  

மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு


 விவிடி சிக்னல் எதிர்புறத்தில் இருந்து இசக்கி அம்மன் கோயில் வரை தற்போது நடைபெற்று வருகின்றது மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.


    முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான ரவீந்திரன்  மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக