thoothukudileaks 8-1-2023
news& photo by:- shanmuga Sundaram
தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா இன்று 8-1-2023 மாலை 4மணியளவில் நடைபெற்றது. தூத்துக்குடி திரேஸ் புரம் பாக்கியநாதன் விளையில் அப்பகுதி பெண்களுடன் ஒன்றாக இனைந்து கனிமொழி எம்.பி, அவரும் பொங்கலிட்டார். .
![]() |
| கனிமொழி எம்பி |
இதுபற்றிய செய்தியாவது
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டரணி திரேஸ்புரம் பகுதி 6வது வட்ட திமுக சார்பில் பாக்கியநாதன் விளையில் ...
சமத்துவ பொங்கல் விழாவில் 15 பொங்க பானை வைக்கப்பட்டு அதில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொங்கலிட்டனர்.
![]() |
| அமைச்சர் கீதா ஜீவன் |
பின்பு விழா மேடையில் ஆயிரம் பெண்களுக்கு சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசியதாவது:-
பொங்கல் என்பது ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் கொண்டாடும் திருநாளாகும்
இந்த பொங்கல் திருவிழா என்பது ஒவ்வொரு தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் விழாவாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் திமுக பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
கவர்னர் தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சர்ச்சை கருத்து மூலம் நம்முடைய அடையாளம் கலாச்சாரம் போன்றவற்றில் மூக்கை நுழைப்பது தேவையற்றது. ஒற்றுமையாக தமிழர்கள் இருந்து வருகிறோம்.
இதுபோன்ற கலாச்சாரங்களை பேணி பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு சூழுரையேற்போம்.
தமிழன் அடையாளம் பெருமை திறமை வரலாறு இவற்றை பின்பற்றுவோம். இங்கு பொங்கலிடும் போது பெண்கள் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
அவர்கள் இமையை கசக்கி கொண்டு நின்றனர் இது போன்ற விறகு அடுப்பில் பெண்கள் சிரமப்படக்கூடாது என்று கேஸ் அடுப்பு உங்களுக்கு எல்லாம் கலைஞர் கொடுத்தார்
இன்றைய தலைமுறையை பற்றி கலைஞர் சிந்தித்து செயல்பட்டார். தற்போது இன்றைய தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைப்பற்றி சிந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றுகிறார். எல்லோருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
ஓட்டப்பிடாரம் வி சண்முகையா எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, கவிதாதேவி, பார்வதி, ராமர், வக்கீல் சீனிவாசன். ஜேசையா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், ராஜ்குமார், செந்தில்குமார், சேர்மபாண்டியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் வக்கீல் ஆனந்தகபரியேல்ராஜ், டேனி, துணை அமைப்பாளர்கள் பால்ராஜ், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பவாணி மார்ஷல், மெட்டில்டா, சரண்யா, வைதேகி, மரியகீதா, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ், பாப்பாத்தி, ஜான், கண்ணன், சுப்புலட்சுமி, ஜான்சிராணி, நாகேஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், டென்சிங், கதிரேசன், சுப்பையா, பாலன், தினகரன், கருப்பசாமி, முக்கையா, ஜான்சன், பொன்பெருமாள், முத்துராஜா, கீதாசெல்வமாரியப்பன், சுரேஷ், செல்வராஜ், வன்னியராஜ், சேகர், நிர்வாகிகள் செல்வம், கணேசன், ஜார்ஜ், குமார், ரஜினிமுருகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மணி, அல்பட், ரேவதி, சந்தனமாரி, பெல்லா, சோலையப்பன், வேல்முருகன், ராஜன், மகேஸ்வரன்சிங், உள்பட பலர்கலந்து கொண்டனர்.
முன்னதாக பரதநாட்டியம் சிலம்பாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி துணைச்செயலாளர் சோலையப்பன் நன்றியுரையாற்றினார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக