தூத்துக்குடி மாவட்டம் : 08.01.2023
News by thoothukudileaks
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை தரக்கூடிய மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது - 15 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
![]() |
| ரூபன் |
இதுபற்றிய செய்தியாவது
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) மணிமாறன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர்மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர் செந்தில்குமார் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகிய நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் நேற்று (07.01.2023) ரோந்து பணியில் ஈடுபட்டார்
அப்போது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரூபன் (21) என்பதும், அவர் ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் நைட்ரவேட் (Nitravet 10 mg) எனப்படும் போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி ரூபனை கைது செய்து, அவரிடமிருந்த மேற்படி 15 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக