புதன், 3 ஏப்ரல், 2024

ஸ்டெர்லைட் -க்கு ஆதரவாக நின்றவர்கள் அதிமுக பாஜக # திமுக வேட்பாளர் கனிமொழி பரபரப்பு பேச்சு!!!நமது அண்ணன் தளபதி பிரச்சாரத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் மூடப்படும்’ என்று உறுதி தந்தார். அதேபோல மூடிக் காட்டியவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். !!!

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂4-4-2024

news by 

arunan journalist 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை க்கு ஆதரவாக நின்றவர்கள் தான் அதிமுக -பாஜக என திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது பரபரப்பு 



இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் குறுக்கு சாலை, குளத்தூர், வைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் ஈடுபட்டார் 

அப்போது திமுக வேட்பாளர் கனிமொழி 

தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-


 தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 2018- ல் அதிமுக -பாஜக கட்சிகள் ஆட்சியில் தான் மக்கள் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  அந்தத் தொழிற்சாலையை எப்படியாவது திறந்து வைத்துவிட வேண்டும் என்று பாஜகவும், அதிமுகவும் முயற்சி செய்தனர். 


ஆனால் கடந்த (2021)சட்டமன்றத் தேர்தலுக்கு முன்... நமது அண்ணன் தளபதி பிரச்சாரத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் மூடப்படும்’ என்று உறுதி தந்தார்.  அதேபோல மூடிக் காட்டியவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.


சில பேர் வேலைவாய்ப்பெல்லாம் போய்விடும் என்று ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக நின்றார்கள்.!!! 


ஆனால் அதை விட பெரிய வேலை வாய்ப்புகளை தரும் நிறுவனங்களை நான் தூத்துக்குடிக்குக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி... உலககத்திலேயே பெரிய கார் தொழிற்சாலையான  வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையை 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் இங்கே கொண்டு வந்திருக்கிறார். 


அந்த ஆலையில் தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று  அவர்களிடம் தெரிவித்திருக்கிறார் முதல்வர்.


ஒரு வேளை  தகுதி இல்லை என்று அவர்கள் கருதினால் தூத்துக்குடி இளைஞர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுத்து அதன் பின் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அண்ணன் தெரிவித்திருக்கிறார்.

மிகப்பெரிய மழை, வெள்ளத்தில் நாம் பாதிக்கப்பட்டோம்.


 ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு ஒரு ரூபாய், ஒரு பைசா கூட தரவில்லை. நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதிதான் நிவாரணம் கொடுத்தார்.


 இடிந்துபோன வீடுகளுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தார். பழுது பார்க்கவும் நிவாரணம் கொடுத்தார்.


 தமிழ்நாட்டுக்கு பாஜக எதையும் செய்யாது, செய்யவும் மாட்டார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.



நமது முதலமைச்சர் ஸ்டாலின் 

கலைஞர் உரிமைத் தொகை இன்று ஒரு கோடியே 16 லட்சம் சகோதரிகள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  சிலருக்கு விடுபட்டிருக்கிறது. அவர்களுக்கும் தேர்தலுக்குப் பிறகு முகாம்கள் நடத்தி வழங்கப்பட்டுவிடும். பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் என்று தேர்தலுக்கு முன்னர் சொன்னார் தளபதி. அதேபோல சொன்னதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றினார்.

தூத்துக்குடியில் ஒரு டைடல் பார்க், கோவில்பட்டி, விளாத்திகுளத்தில் ஒரு டைடல் பார்க் கொடுத்திருப்பவர் நமது முதல்வர் ஸ்டாலின்.

இப்போது?

பாஜகவில் சேர்ந்துவிட்டால் அவர்களின் வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து சுத்தமாக்கி விடுவார்கள், வழக்குகள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படும். ஆனால் பாஜகவில் சேர மறுத்தால் சிறையில் தள்ளப்படுவார்கள். முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள், எம்பிக்களுக்கே இந்த கதி என்றால் சாதாரண சாமானியர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு பேசினார் கனிமொழி.


தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் குறுக்கு சாலை, குளத்தூர், வைப்பார் உள்ளிட்ட   பகுதிகளில்   நேற்று 3-4-2024 திமுக வேட்பாளரும் துணப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி  திரளான மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது....

 தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர்  அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக