வெள்ளி, 7 ஜூன், 2024

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் இனி பாஜக பக்கம் 2026 - சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை விடுத்துள்ளார்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 8-6-2024

photo news Roja arunan journalist 

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் 

இனி ....

பாஜக பக்கம் திரும்புவார்கள் 

2026 - சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை விடுத்துள்ளார் 



இது பற்றிய செய்தியாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் இனி பாஜக பக்கம் திரும்புவார்கள். 2026 - சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்.... 


திமுகவை வீழ்த்த பாஜகவால் மட்டுமே முடியும் என்பது தான் இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி*


பாராளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற 11.24 சதவீத வாக்குகள் தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போகிறது


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக, 11.24 சதவீதம் அதாவது 48 லட்சத்து 80 ஆயிரத்து 954 வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

 

இது பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.



ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தல்,  2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் கிடைத்த தோல்விக்கு, பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள்.


 ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல என்பதை இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது. 


பாஜக உடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட அதிமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது.


 10 மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறது. 


அதிமுக என்ற அரசியல் கட்சியே, 'திமுக எதிர்ப்பு' என்ற ஒற்றைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. 


திமுக எதிர்ப்பு என்ற தூணின் தான் அதிமுக நின்று கொண்டிருக்கிறது.


 அதனால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் திமுக எதிர்ப்பில் அவ்வளவு தீவிரம் காட்டினர்.



 திமுகவினரிடம் பேசினாலே கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.


ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினர், திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனர். 


 "தமிழகம் திராவிட பூமி. இங்கு திமுக, அதிமுக என்று மாறி மாறி தான் ஆட்சிக்கு வரவேண்டும். மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான செங்கோட்டையன், கே.பி.முனுசாமி ஆகியோர் சட்டமன்றத்திலேயே  பேசினார்கள்.


 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளை தவிர, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுகவினர் வேலை செய்யவில்லை.


 பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற திமுகவின் திட்டத்திற்கு அதிமுகவினர் உடந்தையாக இருந்தனர். 


இந்த தேர்தலில் கூட்டணி வைத்திருந்தாலும், இந்த உள்ளடி வேலையைத் தான் செய்திருப்பார்கள்.


இதையெல்லாம் புரிந்து கொண்டு தான், உண்மையை மேலிடத்திற்கு எடுத்துச் சொல்லி, அதிமுக கூட்டணி வேண்டாம். 



அது பாஜகவின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது என்று தனி கூட்டணி அமைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.


 அதற்கு இன்று பெரும் பலன் கிடைத்துள்ளது. 

அதிமுக, திமுக என்ற இருபெரும் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, நாம் தமிழர் போன்ற கட்சிகளின் போட்டிகளுக்கு இடையில், திமுக அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது பெரிய சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது.


கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு,, "அதிமுக கூட்டணியின் தோல்விக்கு பாஜக தான் காரணம்" என்று விவாதம் நடத்தியவர்கள் இன்று "பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது எப்படி?" என்று விவாதம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.


அன்று, "அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம்" என்றவர்கள் இன்று,"பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தோல்வி அடைந்தோம்" என்று

சொல்கிறார்கள். இதுதான் பாஜகவின் வெற்றி. 


தமிழகத்தில் பாஜக பெற்றிருக்கும் 11.24 சதவீதம், மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களின் வழி வந்தவர்கள், அவர்களை பின்பற்றுபவர்கள் இனி பாஜக பக்கம் திரும்புவார்கள்.

எம்ஜிஆர் ஜெயலலிதா இரு பெரும் தலைவர்களின் மீதும் பிரதமர் நரேந்திர மோடி பெருமதிப்பு கொண்டவர். தேர்தல் பிரசாரத்தின் போதும் அந்த இரு பெரும் தலைவர்களின் சாதனைகளை, அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார்.


 ஜெயலலிதாவின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. கடும் எதிர்ப்புகளையும் மீறி, 2002, 2007, 2012 ஆகிய மூன்று முறை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு சென்று வாழ்த்தியவர்

ஜெயலலிதா

2008 ஜனவரியில் துக்ளக் வார இதழ் ஆண்டு விழாவுக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி வந்தபோது, தமிழகத்தில் பலர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மோடியை  தனது இல்லத்திற்கு அழைத்து அறுசுவை விருந்து வைத்தவர்.ஜெயலலிதா. 


இதனால்தான் அதிமுகவினர் பதறுகிறார்கள். கதறுகிறார்கள். 


திமுகவின் தேசிய அணியாக காங்கிரஸ் மாறிவிட்டது.


 இப்போது அதிமுக  திமுகவின் கிளைக் கழகம் போல மாறிக்கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அது பாஜகவால்தான் முடியும் என்கிற நிலையை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.


 இந்த மக்களவைத் தேர்தல் உணர்த்தும் உண்மை இதுதான்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் 

ஏ.என்.எஸ்.பிரசாத் 

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக