சனி, 8 ஜூன், 2024

தமிழிசை அவர்களுக்கு சில கேள்விகள்? வாட்ஸ் அப் ல பரவிவரும் பதிவு பரபரப்பு.

 தமிழிசை அவர்களுக்கு சில கேள்விகள்.???


கவர்னர் பங்களாவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு பதவி காலம் முடியும் தருணத்தில், பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை அறிந்து, எம்.பி. ஆக வேண்டும் எனும் ஆர்வத்தோடு தமிழக அரசியலில் இறங்குகிறீர்கள். நீங்கள் பாஜக தமிழக தலைவராக இருக்கையில் சாதித்தது என்ன ?


தூத்துகுடியில் நீங்கள் சார்ந்த நாடார் சமூகத்தினர் மட்டுமே  உள்ளதாக. பொய் சொல்லி சீட் வாங்கி அங்கு நீங்கள் போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் டெப்பாசிட் இழந்தீர்கள்.  ஆனால் நாடார் அல்லாத கனிமொழி தன் சாதியை காட்டிக் (வேளாளர்) கொள்ளவே பல லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுகிறார். இதை பார்த்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?


நீங்கள் உண்மையில் மீண்டும் கள அரசியலில் இறங்க நினைத்திருந்தால் கவர்னர் பதவி வேண்டாம் எனக் கூறிவிட்டு தூத்துக்குடியின் ஒவ்வொரு சந்து பொந்திலும் இறங்கி, உங்களுக்கான களத்தை அல்லவா ஏற்படுத்தியிருக்க வேண்டும் ?



மேலும் உங்கள் சமூகத்தினர் உங்களுக்கு வாக்களிக்கும் வகையில் நீங்கள் என்ன முன்னெடுப்புகளை எடுத்தீர்கள். மைக்ரோ லெவலில் என்ன மாதிரியான செயல்பாடுகளை செய்தீர்கள் ? 


தென் சென்னை பகுதியில் சுமார் இரண்டு லட்சம் பிராமண சமூகத்தினரின் வாக்குகள் உறுதியாக பாஜகவுக்கு வரும் எனும் நிலையில்,  அங்கு வந்து போட்டியிடுகிறீர்கள். அதிலும் எஸ்.ஜி.சூர்யா போன்ற இளைஞர்கள் கடுமையாக உழைத்து களத்தை தயார் செய்திருந்த பகுதி. H ராஜாஜிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை நீங்கள் லாபி செய்து தட்டிப் பறித்தீர்கள். அதனால் நீங்கள் சாதித்தது என்ன ? 


உங்களுக்கு கிடைத்த வாக்குகளில் உங்கள் பங்களிப்பு என்ன ? நீங்கள் பாஜகவை நோட்டாவுக்கு கீழே வைத்திருந்த நிலையில், உங்களால் பாஜகவுக்கு வாக்கு அதிகரித்திருக்கும் என நினைக்கிறீர்களா ? 

கெடுத்தீர்கள்!!!

S.G. சூர்யா போட்டியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் வாக்குகள் அதிகமாக வாங்கியிருப்பார்.

ஏப்பம் விட்டாரா?

 தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்ட பெருந்தொகை கூட உங்களை போன்ற பல வேட்பாளர்களால் ஏப்பம் விடப்பட்டது என்பது தற்போது பாஜக வட்டாரம் முழுதும் பேசு பொருள் ஆகி வருகிறதே ?

 திமுக அதிமுக விடம் ...

அட்ஜெஸ்ட்மெண்ட் !!!

அடிமட்ட அளவில் பாஜக தொண்டர்கள் திமுகவை எதிர்த்து பாஜக வெற்றி பெற வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில்..

 நீங்கள் உங்கள் சுயநலத்திற்காக இரண்டு திராவிட கட்சிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட் அரசியல் செய்துக் கொண்டு, கட்சியை திராவிட கட்சிகளின் அடிமையாக தொடர வேண்டும் என துடிக்கிறீர்கள். 


இனி இது ஒரு போதும் நடக்காது. உங்கள் அடிப்பொடிகள் சில பரப்புரை செய்வது போல் பாஜக வெறும் பத்து சதவீத வாக்குகளே வாங்கியிருந்தாலும், அது முழுக்க முழுக்க பாஜகவிற்கான வாக்கு. 


எந்த திராவிட கட்சிகளின் காலை நக்கி வாங்கிய ஓட்டு இல்லை அல்லவா ?


நீங்கள் கட்சிக்கு உண்மையாகவே உழைக்க வேண்டும், உதவ வேண்டும் என்றால், தூத்துக்குடியில் மாவட்ட செயலாளராக பதவி வாங்கிக் கொண்டு அங்கு போய் முகாம் இடுங்கள். 


. தயவு செய்து அடுத்தவர் உழைப்பை திருடாதீர்கள். 


அது இயலாது என்றால் அருணாச்சல பிரதேசத்திற்கோ, மேகாலயாவிற்கோ ஆளுனர் பதவி வாங்கிக் கொண்டு சென்று விடுங்கள். செய்வீர்களா ?


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

வைரல் வாட்ஸ் அப் பதிவு தான் இது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக