சனி, 8 ஜூன், 2024

நாளை10-6-2024 பள்ளி திறப்பு தூத்துக்குடி மாநகராட்சி 20 பள்ளிகள் தயார்மேயர் ஜெகன் பொியசாமி தகவல்

 ▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 8-6-2024

photo

News by sunmugasunthram Reporter 


பள்ளி திறப்பு தூத்துக்குடி மாநகராட்சி 20 பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. மேயர் ஜெகன் பொியசாமி தகவல்


இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை ஜூன் 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பள்ளி திறப்பு அன்று அனைவருக்கும் தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 




இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளனவா எனவும் இருக்கைகள் மற்றும் வளாகத்தினை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறியிருந்த நிலையில் அதன்படி மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேயர் வேதனை!!

     பின்னர் அவர் கூறுகையில்... அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகமும் முறையாக நடைபெறவில்லை.


 அதன்கீழ் வரும் 20 பள்ளிகள் பராமாிப்பு மற்றும் எதிர்கால தலைமுறையினர் நலன் குறித்து அதற்கு தேவையான கட்டமைப்பு பணிகளை முறையாக செய்துள்ளோம்.



 இதனால் கடந்த ஆண்டு அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் சேர்க்கை அதிகாித்துள்ளன.


 அதே போல் தேசிய அளவில் அரசு பள்ளிகள் சிறப்பாக நடைபெறுகிறது.


  தேசிய அளவில் மேற்கொண்ட ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 3வது இடம் தேர்வு செய்யப்பட்டு ஓன்றிய அரசால் விருதுகள் வழங்கப்பட்டு மாநகராட்சியை கௌவரவித்தனர்.


 இந்தஆண்டு பள்ளி மாணவர்களின் சேர்க்கை மீண்டும் அதிகாித்துள்ளது


 அதற்கு ேதவையான கட்டமைப்புகளை நாளை(10-6-2024) பள்ளி திறக்க இருப்பதால் முழுமையாக சென்று ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு எல்லா கட்டமைப்பு பணிகளும் சாியாக இருக்கிறதா என்பதை நோில் பார்வையிட்டு அதில் குறைபாடுகள் ஏதுவும் இருந்தால் சாி செய்வதற்கு அதிகாாிகள் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


 ஓரு நாட்டின் வளர்ச்சியில் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் எதிர்காலம் படிப்பறிவு இல்லாத மாநிலமாக உருவாகும் போது எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் அந்த அடிப்படையில் முதலமைச்சாின் உத்தரவு படி இந்த பணிகளை செய்து வருகிறோம் என்றார்.


     உடன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நேர்முக உதவியாளர் துரைமணி, மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக