ஞாயிறு, 9 ஜூன், 2024

தூத்துக்குடியில் சிகரெட் திருடன் நள்ளிரவில் ஜுஸ் பார்க் கடையை உடைத்து திருட்டு தூத்துக்குடி காவல்துறை அதிகாரியிடம் புகார்

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 8-6-2024

தூத்துக்குடியில் சிகரெட் திருடன் நள்ளிரவில் ஜுஸ் பார்க் கடை பூட்டை உடைத்து திருட்டு தூத்துக்குடி காவல்துறை அதிகாரியிடம் புகார் 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடியில்  சிகரெட் திருடன் ஜுஸ் பார்க்ல புகுந்து திருடியதாக காவல்துறையில் புகார் 

தூத்துக்குடி மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்க உறுப்பினர் K.S.புரூட்ஸ் & ஜூஸ் பார்க் உரிமையாளர் சதீஷ்குமார் சின்னகன்னுபுரத்தில்  ஜுஸ் பார்க் கடைநடத்தி வருகிறார் 

நள்ளிரவில் திருட்டு!!

நேற்று நள்ளிரவில் 08.06.24

   அவரது ஜுஸ் பார்க் கடையில் புகுந்து சிகரெட் பாக்கெட்களை அள்ளி சென்று உள்ளான்

 திருடப்பட்ட சிகரெட் மதிப்பு ரூபாய் 2400  மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 4000 திருடி சென்றுள்ளான்.

அதிர்ச்சி!!!

மறுநாள் காலையில் கடை திறக்க வந்த கடை உரிமையாளர் சதீஷ் குமார் தனது கடை பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சிகரெட் மற்றும் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.


இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தார்



 தூத்துக்குடி மத்திய சங்கத்திற்கு தகவல் கிடைத்தவுடன் மத்திய சங்க இணைச்செயலாளர் தெர்மல் சொ.ராஜா சம்பவ இடத்திற்கு  வந்தார்.  


தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது 

   தூத்துக்குடி மத்திய சங்க இணைச் செயலாளரும் மாநில இளைஞரணி அமைப்பாளருமான  தெர்மல் சொ. ராஜா, புது பஸ் ஸ்டாண்ட் சங்க செயலாளர் தளபதி செபஸ்தியான் மற்றும் அண்ணா பேருந்து நிலைய சங்க பொருளாளர் விக்னேஷ் மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்கம்செயலாளர்பா.காளிதுரை  மீளவிட்டான் சங்க பொருளாளர் ஏனோஸ் ஆகியோர் உடன் சென்றனர் 



தற்போது தூத்துக்குடி காவல்துறை சிகரெட் திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.


 


                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக