ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

அரசு விழாவாக முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் கடைப்பிடிக்க படுமா ? தமிழக அரசின் பதில் என்ன ???

▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 28-4-2024

news by arunan journalist

அரசு விழாவாக முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன்  பிறந்தநாள்  கடைப்பிடிக்க படுமா ? தமிழக அரசின் பதில் என்னவாகும் என எதிர்பார்ப்பு???

இது பற்றிய செய்தியாவது:-

தமிழக அரசு மறைந்த தேசிய தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரது பிறந்தநாளை அரசு விழாவாக அன்று கொண்டாடப்படுகிறது.




முன்னாள் முதல்வர்

அன்னை ஜானகி ராமச்சந்திரன்

பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாட பட வேண்டும் என நீண்ட வருடங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து..

தூத்துக்குடி மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர்மன்றம்

செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் தகவல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

அதற்கான பதிலும் தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பதிலும் அனுப்பி வைத்துள்ளார் கள்

முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படம் குறித்து சட்டமன்றத்தில்  தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

. மேலும் விவரமாவது 

        முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டுதல் அரசின் கொள்கை முடிவாகும் என்று தூத்துக்குடி மனிதநேய பண்பாளர் எம். ஜி.ஆர் மன்ற செயலாளர் சத்யா இலட்சுமணனுக்கு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பதில் 

தூத்துக்குடி

கீழச்சண்முகபுரம் பிராப்பர் தெரு மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சத்யா இலட்சுமணன் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார்.

       அதில் கூறியுள்ளதாவது...... தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ந்தேதியை அரசு விழாவாக அறிவிக்கவும், சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படத்தை திறந்துவைக்கவும் கேட்டுக்கொண்டார்.

        அந்த மனுவிற்கு  இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புமற்றும் அரசு துணைச்செயலாளர் அலுவலரால்அளிக்கப்பட்ட பதிலில் முன்னாள் முதல்வர் அன்னைஜானகி ராமச்சத்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவாகும், என்ற விபரமும், அன்னை ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்துவைக்கும் தங்களது கோரிக்கை சட்டமன்றத்தைச் சார்ந்ததால், தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.  விபரத்தை தெரிவித்தது.

தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படம் சட்டமன்றத் வளாகத்தில் நிறுவ படுமா மற்றும் அரசு விழாவாக முன்னாள் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாள் அறிவிக்கப்படுமா எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக