வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஓய்வூதியர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஜி.எம். அலுவலகம் முன்பு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 31:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவை பணபலன்கள் மற்றும் பென்ஷன் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி ஜி.எம். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


thoothukudileaks


“தமிழக அரசே… நிர்வாகமே…! நீதிமன்ற தீர்ப்புப்படி பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையான DA-வை நிலுவையுடன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும். ஒப்பந்த உயர்வை பென்ஷனில் சேர்த்து வழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ.300 வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை கல்வித் தகுதிக்கேற்ப தாமதமின்றி வழங்க வேண்டும்.


 2024 ஆகஸ்ட் முதல் வழங்க வேண்டிய பணபலன்களை 18% வட்டியுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர் மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு ஈமக்கிரிய நிதி ரூ.50,000 வழங்க வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகள் முழங்கின.

கோரிக்கை மனு வழங்கல்

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில்,

உயர்திரு போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு

(தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – தூத்துக்குடி மண்டலம்) கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அதில்,

ஓய்வு பெற்ற தினத்தன்றே அனைத்து பணபலன்களையும் வழங்க வேண்டும்.

2024 ஆகஸ்ட் முதல் நிலுவைத் தொகைகளை 18% வட்டியுடன் வழங்க வேண்டும்.

பணி விடுப்பு ஊதியம் (EL சரண்டர்) ஓய்வு நாளிலேயே வழங்க வேண்டும்.

பணி ஓய்வு ஊதிய ஆடரை (Retirement Order) ஒரு ஆண்டுக்குள் முழுமையாக வழங்க வேண்டும்.

கிராஜுவிட்டி ஆடரை ஓய்வு நாளிலேயே வழங்க வேண்டும்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பணியின் போது இறந்த தொழிலாளரின் குடும்பத்திற்கு கல்வித் தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர் குறை தீர்ப்பு கூட்டத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டும்.

பணமில்லா மருத்துவ வசதி அமல்படுத்த வேண்டும்.

31.09.2019 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதியத்தால் ஏற்பட்ட கிராஜுவிட்டி மற்றும் EL சரண்டர் வித்தியாசத் தொகைகளை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர் மரணத்திற்கு பின் சான்றிதழ் தாமதம் காரணமாக வாரிசுக்கு வழங்கப்படாத பென்ஷனை உடனே வழங்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் PRWS வழக்கில் உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

என வலியுறுத்தப்பட்டது.

தலைமை – உரைகள்

ஆர்ப்பாட்டத்திற்கு தானுமூர்த்தி தலைமை வகித்தார்.

முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

எட்டப்பன் (மாநில குழு உறுப்பினர்), தானுமாலையான் (கிளை பொருளாளர்), சின்னதம்பி (இறை செயலாளர்), செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மேலும் மது சேகர், பழனி, பொன்ராஜ், சிங்கராஜ், செல்வராஜ், சிவதானுதாஸ் (மாநில உதவி செயலாளர்), பெலிக்ஸ் (கிளை தலைவர்), சகாயராஜ், மாரிமுத்து, சுப்பையா, செல்வபெருமாள், மாணிக்கம், ஜானகென்னடி, பால்ராஜ், சண்முகராஜன், சுபேர், வீரப்பன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக