பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று(1-10-2024) நடைபெற்ற தருவைகுளம் மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாமக கட்சியின் மாநில பொது பொருளாளர் திலகபாமா அசால்டாக இருக்க கூடாதுஇலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம் என ஆவேசமாக பேசினார்.
இது பற்றிய செய்தியாவது:-
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருவைகுளம் மீனவர்களை அழைத்துக் கொண்டு சென்று 22 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படும் வரைக்கும் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொது பொருளாளர் திலகபாமா தருவை குளத்தில் இன்று நடந்த 22 மீனவர்கள் குடும்பத்தினரிடம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
ஆறுதல்!!!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 22 மீனவர்கள் கடலோர இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் அந்த 22 மீனவ குடும்பங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா நேரில் சென்று ஆறுதல் கூறினார் .
முற்றுகை!!!
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை தருவை குளத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடத்தினார்கள்.
இதில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கூறும் போது...
" நீங்கள் எல்லோரும் என்னோடு ஒத்துழைத்து வருகிற திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமைக்குள் ஒரு நாளை குறித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம்"
அசால்டாக இருக்க கூடாது?
இதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் முக்கியம் அனைவரும் வரவேண்டும்
"நான் போகவில்லை என்றால் என்ன என்று அசால்டாக ஒருவரும் இருக்கக் கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருந்து போராட வேண்டும்"
நான் தயார்!!!
22 மீனவர்களும் வெளியே வரும் வரைக்கும் ... இலங்கை தூதரகம் வாயிலில் உட்காருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு தேவை
ஏற்கனவே மூன்று மாதங்கள் ஆகிவிட்டது சாப்பாடு இல்லாமல் நாம் பட்டினியோடு இருக்கின்றோம்.
இதுவரை மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை
எனவே இந்த போராட்டத்திற்கு நீங்கள் வருவீர்களா என்று கேள்வி கேட்டார்?
கண்ணீர்!!!
அனைவரும் நாங்கள் வருகிறோம் நீங்கள் கூப்பிடுகிற இடத்திற்கு நாங்கள் வருகிறோம் என்று கண்ணீருடன் உறுதி அளித்தனர்
பாமக மறந்து விடுங்கள்!
எங்களது கட்சியை எல்லாம் மறந்து விடுங்கள் நாளை தமிழகத்தில் எந்த மூளை முடுக்கிலும் உள்ள மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது இந்தக் கடல் இலங்கை மீனவர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும் தருவை குளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு தீர்வு வந்ததாக இருக்க வேண்டும் .
இந்த போராட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்கிறோம் .
நீங்கள் வந்தால் மட்டும் போதும் உங்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நாங்கள் செய்கிறோம் நமக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் பேசினார்
✋ கை தட்டல்!!!
கூட்டத்தில் கலந்து கொண்ட தருவைகுளம் கிராம மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் கைகளை தட்டி ஆதரவு தெரிவித்தனர்
பின்னர் ... திலகபாமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்....!
எங்களைப் போன்று தான் இலங்கையில் உள்ள மீனவர்களும் எனவே அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும் .
எங்கள் இரண்டு பேருக்கும் ஆன பிரச்சனைகளை தீர்த்து நாங்கள் சுமுகமாக வாழ்வதற்கு வழிவகை செய்யுங்கள்
முதலில் 22 மீனவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் அந்த 22 மீனவர்களுடைய குடும்பத்திற்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்
முதல்வர் இந்த பிரச்சனைக்கு தீர்வை நாங்கள் வாங்கித் தருகிறோம் என்று பதில் சொல்ல வேண்டும்
இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து மீனவ இயக்கங்களையும் இணைத்து தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்களாக மதிக்கப்பட வேண்டும்
அடுத்த வாரம்!
அதற்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி
அடுத்த வாரம் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.
முற்றுகை போராட்டம் அறிவிப்பு!!!
இந்த அறிவிப்பை பாமக தலைமை அறிவிக்கும் ?
மத்திய அரசுக்கும் மாநில அரசிற்கும் அன்போடு எடுத்துச் செல்கிறோம்
எங்களது இயலாமையில் காரணமாக பேசுகின்றோம்.!
அரசு தயவு செய்து இந்த விஷயத்தில் தலையிட்டு 22 பேரை விடுதலை செய்து தர வேண்டும்
அடுத்து வரும் காலங்களில் மீனவர்கள் பிரச்சினை தீர்வு காணப்பட வேண்டும்
கண்டும் காணாமல் உள்ள அரசுகளுக்கு இந்த மீனவர்களின் குரல் கேட்கப்பட வேண்டும் மத்திய அரசின் மானிய விலையில் வழங்கப்பட்ட படகும் இந்த இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இதனை வன்மையாக கண்டிக்கிறோம்
புதிதாக பதவி ஏற்றுள்ள ஜனாதிபதி அவர்கள் மீனவர்களின் பிரச்சனை குறித்து மீனவர்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்
இந்திய அரசும் இலங்கை அரசும் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும்
இல்லை எனில் இலங்கை தூதரகம் முன்பு கிடப்பதற்கு தயாராக இருக்கிறோம் எங்களுக்கு தீர்வு சொல்லுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
இந்த பேட்டியின் போது தருவைகுளம் ஆலய பங்குத்தந்தை வின்சென்ட், ஊர் கட்டளைதாரர் மகாராஜன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர் நிர்வாகிகள் 22 மீனவர்களின் குடும்பத்தினர் என அனைவரும் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக