தூத்துக்குடி லீக்ஸ் 6-11-2023
செய்தி புகைப்படங்கள்
அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள்
மற்றும் அரசியல் கட்சியினர் போலியான ஆவணங்கள்
மூலம் கையகப்படுத்தி உள்ளார்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயம் செய்யவிடாமல் ..தடுப்பதாக புகார்
தமிழர் விடுதலைக் களம்
சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் கூட்டத்தில் பரபரப்பு ...
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில்
தமிழர் விடுதலைக் களம் சார்பில் நேற்று 5-11-2023விளாத்திகுளம் ஆர்த்தி மஹால், சட்டம் மற்றும் அரசியல் பயிற்சியரங்கம் நடைபெற்றது.
தலைமை : வழக்கறிஞர் வே.காளிராஜ்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் [வ]
சிறப்புரை : வழக்கறிஞர் . ப.ராஜ்குமார்
தலைவர் - நிறுவனர் தமிழர் விடுதலைக்களம் கலந்து கொண்டார்.
அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு உடன் இங்கு உள்ள அரசியல் வாதிகள் விவசாய நிலங்கள் நீர்நிலை ஓடைகள் ஆக்ரமிப்பு!!!!
நிறைவேற்றப்பட்ட பரபரப்பு தீர்மானங்கள் !!
வானம் பார்த்த பூமியாக விளங்கும் விளாத்திகுளம் தொகுதியில் மழையினை
மட்டும் நம்பி விவசாயம் செய்யும் பூமியாகும், விளாத்திகுளம் வைப்பாற்று
பகுதியில் நீர்நிலை ஓடைகள் மற்றும் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து காற்றாலை
மற்றும் சோலார் நிறுவனங்களின் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர்.
காற்றாலை சோலார் நிறுவனங்களின் மின்கம்பங்கள் கொண்டு செல்லும்
வழிதடங்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றனர்.
விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதாக
புகார் !!!
1980 ஆண்டுகளுக்கு முன்பே வறட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பூமி ஆகும்.
இந்த விளாத்திகுளம் தொகுதி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும்
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்யவிடாமல் தடுப்பதாக
புகார் தெரிவித்து வருகின்றனர்.
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் விவசாய நிலங்களை அரசு அதிகாரிகள்
மற்றும் அரசியல் கட்சியினர் போலியான ஆவணங்கள்
மூலம் கையகப்படுத்தி உள்ளனர்.
விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை
எடுக்கபடவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு பரபரப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில்
தமிழர் விடுதலைக் களம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் சோ.சரவணக்குமார்
நன்றியுரை செய்தார்.
பயிற்சி யரங்க கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கொண்டார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக