thoothukudileaks 8-11-2023
வியாபாரிகள் VS ஷேர் ஆட்டோ
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையம் பகுதி தத்தளிக்கிறது?
டிராபிக் காவல்துறை மாமூல் வேட்டையால் உருவாகும் பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள்.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேறிஞர் அண்ணா பேருந்து நிலைய பாளை சாலை டிராபிக் காவல்துறை யால் தெரு மாதிரி குறுகி அவ்வழியே பிற வாகனங்கள் செல்ல மிக சிரமம் ஏற்பட்டு வருகின்றன .
. இடது கரையோரம் பொதுமக்கள் நடந்த செல்லவே முடியாது. தற்போது
தீபாவளி நெரிசலால் தத்தளிக்கிறது. "எப்போதுமே
ஆங்காங்கே வாகனங்களான ஆட்டோ குறிப்பாக ஷேர் ஆட்டோ க்கள் நிறுத்தம் போல் நின்று விடுகிறார்கள் இதனால் பொதுமக்கள் அப் பகுதியில் பெரும் இடைஞ்சல் உள்ளாகின்றன
.பேருந்து நிலையம் சுவர் முன் ஷேர் ஆட்டோ நிறுத்தம் என்று நிறுத்தி கொள்கிறார்கள்
யார் அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை இதனால் கடந்த 6-11- 2023
அன்று ஷேர் ஆட்டோவினர் எதிரில் கடை வைத்து இருந்த ராஜா டெக்ஸ் டைல் உரிமையாளரரை தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளார்கள். வியாபாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்துமத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்
வியாபாரிகள் தரப்பில் இதற்கு எல்லாம் டிராபிக் அதிகாரிகள் தான் சம்திங் மாத பகடியாக வசூல் வேட்டை கொடிகட்டிப் பறக்கிறது ஷேர் க்கு 25 தெவுசன் மினி க்கு 25 தெவுசன் லோடு லாரிக்கு50 தெவுசன் பிளாட் பார
கடை கையேந்தி வசூல் வேற அப் பகுதியில் ஹோட்டல் களில் ஓசி கல்லா கட்டு வேற ஜமாய்க்கறாங்க .
இது காவல்துறை மேலதிகாரிகள் தெரியுமா என குமுறுகின்றனர்.
பொதுமக்களும் வியாபாரிகளாகிய நாங்கள் தான் பாதிக்கபடுகிறோம்
ஷேர் ஆட்டோ அதிகளவு உள்ள மதுரை போன்ற பிற மாவட்டங்களில் கூட ரன்னிங் தான் செல்கிறது எல்லா பகுதிகளில் செல்ல வேண்டும் ஆனால் இங்கே அண்ணா பேருந்து நிலையம் மட்டும் அனைத்து ஷேர் ஆட்டோ முன் நிறுத்தம் செய்து செல்கிறது
தூத்துக்குடி புதுபஸ்ஸாடாண்ட் பகுதியில் ஷேர் ஆட்டோ என்பதே இல்லை
எல்லாமே இப்பகுதியில் சுற்றி தான் நெருக்கடி யாக வலம் வருகின்றன
மினி பஸ் ஷேர் ஆட்டோ நோக்கமே அரசு பஸ் போகாத செல்ல முடியாத பகுதியில் இயங்க வேண்டும் என்பதே
மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் மூலம் எங்கே வேண்டும் மானாலும் போகலாம் என்று
அனுமதி கொடுத்துவிட்டார்களா! !! வழித்தடம் வரையறை எல்லாம் இம்மாவட்டத்தில் காற்றில் பறக்கிறது
இனியாவது தமிழக அரசு கவனிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என சமுக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக