ஞாயிறு, 21 டிசம்பர், 2025

திமுக இன்னும் மதசார்பற்ற கட்சி என மக்கள் நம்ப வேண்டுமா ? முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் என பாஜக கடும் காட்டம்!!!

 முருகப் பெருமான் மீது நம்பிக்கையில்லாத முதல்வர் ஸ்டாலினோடு

முருகன் எப்படி கைகோர்ப்பார்?

தனது அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி வரும் உதயநிதி,

முழு உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்

கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

"நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான்"

என்று வெளிப்படையாகக் கூறினார்.


thoothukudileaks


அந்த நேரத்தில் தனிப்பட்ட நம்பிக்கையாக கூறப்பட்ட இந்த கருத்து, தற்போது அரசியல் நிலைப்பாடாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே மனித நேயம், சமத்துவத்தை போதிக்கின்றன. சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும் என்பதை நிரூபித்தவர் இயேசு கிறிஸ்து"

என்று பேசியுள்ளார்.

கிறிஸ்தவ மதத்தையும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளையும் பாராட்டுவதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அது வரவேற்கத்தக்கதே. ஆனால், “கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை” என்ற கூற்றின் மூலம், திமுக ஒரு மதச்சார்பற்ற கட்சி என்ற அடையாளத்தை இழந்து வருகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இதுவரை தங்களை நாத்திகர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் கூறி வந்த திமுக தலைமையினர், இப்போது மத அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்களா? கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக தனது உண்மையான அடையாளத்தை வெளிக்கொணர்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின், மீதமுள்ள உண்மைகளையும் வெளிப்படையாகச் சொல்லிவிடுவது நல்லது.

"சாதாரண மனிதரும் மக்கள் தலைவராக முடியும்" என்பது உண்மையேயான கருத்துதான். ஆனால், திமுகவில் அந்த வாய்ப்பு உண்மையில் இருக்கிறதா? கருணாநிதி குடும்பத்தைத் தவிர, தற்போது ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர, வேறு யாரும் தலைமை பதவியை கனவில்கூட நினைக்க முடியாத நிலை உள்ளது. ஸ்டாலின் குடும்பத்து ஆண் வாரிசுகளுக்கே தலைமை பதவி என்ற நிலை தொடரும் நிலையில், சாதாரண தொண்டன் தலைவர் ஆக முடியுமா என்ற கேள்விக்கு உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் பி.கே. சேகர்பாபுவின் செயல்பாடுகள், இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. இந்து கோவில் மரபுகள், திருவிழாக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்த மறுப்பது, இந்து உணர்வுகளுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே பார்க்கப்படுகிறது. கோவில் பணத்தை பயன்படுத்தி, கோவில்களுக்கு எதிராக வழக்குகள் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் இந்து விரோதப் போக்கு வெளிப்பட்ட நிலையில், “முதல்வர் ஸ்டாலினோடு முருகன் கைகோர்த்துள்ளார்” எனப் பேசுவது, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அவமதிக்கும் செயல் ஆகும்.

முருகப் பெருமான் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டவர்கள், அவரை அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்துக்கள் இன்று விழிப்புணர்வு பெற்றுள்ளனர். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்து விரோதப் போக்குடன் செயல்படும் திமுக அரசுக்கு, உரிய நேரத்தில் தக்க பதிலை வழங்குவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

— ஏ.என்.எஸ். பிரசாத்

செய்தி தொடர்பாளர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக