தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி:அக்2
கரூரில் 41 பேர் பலியான கொடிய சம்பவம் தொடர்பாக, தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கடுமையான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
“முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது சட்டவிரோதமான பத்திரிகையாளர் சந்திப்பில், மக்கள் விரோதமான செயல்பாடுகளை மறைக்கும் வகையில் பொய்யான விளக்கங்களை அளித்துள்ளார்.
ஊழல், பண பலம், சதி அரசியலால் நீதியை குழி தோண்டி புதைக்க முடியாது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.
கரூரில் ஏற்பட்ட பெரும் உயிரிழப்பின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக பொதுமக்களிடையே சந்தேகம் நிலவுகிறது.
அதற்கு உடனடியாக சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும். 6 கோடி தமிழர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில் முதல்வர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்..png)
திமுக இயக்கம் ஊழலை எதிர்க்க உருவாக்கப்பட்டதாக பெருமை பேசிக்கொண்டிருந்த நிலையில், இன்று முழுக்க முழுக்க ஊழலுக்கு துணை போகும் ‘ஐந்து கட்சி அமாவாசை கூட்டணியோடு’ இணைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி, விபத்தின் காரணத்தை நடிகர் விஜயின் வருகை நேரத்துடன் தொடர்புபடுத்தி கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தன்னுடைய ஊழல் அரசியலை மறைக்க, போலியான கேள்வி–பதில் வடிவில் தன்னைத் தானே காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தில் பாஜக எம்பிக்கள் குழு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீனமான விசாரணை நடந்து உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
சிபிஐ விசாரணை தேவை!!
முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், மக்களின் நலனுக்காக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
பாஜக, உண்மை வெளிப்படவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் கடைசி வரை போராடும்,” என்று பிரசாத் தெரிவித்துள்ளார்.
–
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக