வியாழன், 2 அக்டோபர், 2025

பொட்டலூரணி : கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் போராட்டம் 500ஆவது நாள்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

பொட்டலூரணி : கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் போராட்டம் 500ஆவது நாளை எட்டியது

தூத்துக்குடி பொட்டலூரணியில் ஜெனிபா இந்தியா, மார்க்ஸ்மென், என்.பி.எம் போன்ற கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி நடைபெற்று வரும் தொடர் போராட்டம் இன்று 500ஆவது நாளை எட்டியது. இதனை முன்னிட்டு மாவீரன் பகத்சிங் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது.



மாவீரன் பகத்சிங்கின் உருவப்படத்திற்கு ஊர்ப்பெரியவர் ஐயா கிருஷ்ணன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், போராட்டக் கோஷங்கள் முழங்கப்பட்டன.

கருத்தரங்கில் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு போராளி தோழர் சு.ப. உதயகுமார், நாம்தமிழர்கட்சி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் ஹிம்லர், மக்கள் அதிகாரக் கழக பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன், டங்க்ஸ்டன் எதிர்ப்பு போராளி தோழர் கம்பூர் செல்வராஜ், சிபிஐஎம்எல் சார்பில் தோழர் சகாயம், எஸ்டிபிஐ சார்பில் தோழர் அகமதுநவவி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.



மேலும் பேராசிரியர் பாத்திமாபாபு, மக்கள் அதிகாரக் கழகத் தோழர் செல்வம், நாம்தமிழர்கட்சித் தோழர் வைகுண்டமாரி, சமூக ஆர்வலர் தோழர் மோகன், சமூக ஆர்வலர் தோழர் சந்திரசேகரன், தமிழர் நீதிக்கட்சித் தோழர் அழகுராசன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.

போராட்டக்குழுவின் தலைமைப் பொறுப்பாளர் தோழர் சண்முகம் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக