thoothukudileaks 20-1-2023
Photo news by Ravi
டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் நடைபெற்றது .
இது பற்றிய செய்தியாவது -
தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளியில் என்சிசி சார்பில் இன்று 20-1-2023 காலை 10 மணியளவில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
முன்னதாக என்சிசி மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் ஆரம்பமானது.
. கருத்தரங்கு நிகழ்ச்சியில்
விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கனகரத்தின மணி தலைமை தாங்கினார் .
மாப்பிள்ளை யூரனி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார் டெங்கு காய்ச்சல் பற்றி டெங்கு எவ்வாறு உருவாகின்றன என்பது பற்றியும் மாணவ மாணவிகள் விழிப்புடன் இருந்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கருத்துக்கள் வழங்கினார்கள்.
டாக்டர் ரேணுகா (தூத்துக்குடி மாவட்ட புகையிலை தடுப்பு அதிகாரி ) டெங்கு காய்ச்சல் பற்றி மாணவ மாணவிகளுக்கு எப்படி நாம் அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் நமது பக்கத்து வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கூறினார்.
சமூகப் பணியாளர் ரோசாரி பாத்திமா சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஸ்டாலின். பாரதிராஜா. அருண்குமார் சுரேஷ் பள்ளி செயலாளர் நேர்முக உதவியாளர் சாகுல் ஹமீது உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சி முடிவில் தமிழ் ஆசிரியை செல்வ முத்துலட்சுமிநன்றியுரை ஆற்றினார்.
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என் சி சி ஆசிரியர் ஆல்பன் செய்திருந்தார்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக