thoothukudileaks 20-1-2023
photo news by shanmuga Sundaram
நாமக்கல் அங்கன்வாடி மையத்தில்
கலெக்டர் ஸ்ரேயா உடன் அமைச்சர் கீதா ஜீவன் அங்கன்வாடி மையங்களில் தீடீர் ஆய்வு செய்தார்.
நாமக்கல்: சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2022 ஆண்டு 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி அனைத்து துறை அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்த பணிகளை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு அரசு அறிவித்த திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என்ற ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் படமுடிபாளையம் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளை உட்கொண்டு உணவுகளை வழங்கி ஆய்வுகளை மேற்கொண்டார்.
அதன் பின்பு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது:-
நாமக்கல்: சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம், அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் சதீஷ்பாபு, மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், மற்றும் அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக