thoothukudileaks 16-2-2023
photo news by Roja arunan
2023-ல் கல்வி செய்திகள் நடத்தும் ஒவிய போட்டி தூத்துக்குடி மாவட்ட 27 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
இது பற்றிய செய்தியாவது .-
கல்வி செய்திகள் மாத இதழ் தொடர்ந்து நம் மாவட்டத்தில் பல்வேறு கல்வி பணிகள் பள்ளி குழந்தைகள் நலன் குறித்தும் பள்ளி வளர்ச்சி மாணவ மாணவிகளின் திறமை வெளிபடுத்தி விளையாட்டு நினைவாற்றல் போன்றவற்றை ஊக்கப்படுத்தி வருகின்றது
நம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி நிகழ்வு செய்தி தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து நற்பணி செய்து வருகிறது.
வருகின்ற 18-2-2023 சனிக்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் ஓவிய போட்டி கல்வி செய்திகள் மாத இதழ் நடத்துகின்றது.
இடம்:- ஏ.பி.சி. வீரபாகு மெட்ரிக் லேசன் மேல்நிலைப் பள்ளி தூத்துக்குடி
தேதி 18-2-2023
காலை 11 am to 12.15 வரை ஒவிய போட்டி நடைபெறும்.
மதியம் 2 மணியளவில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு சான்றிதழ்கள் வழங்குகின்றன.
தலைப்பு
1 பெண்மை போற்றுவோம்
2 எனது கனவு தூத்துக்குடி
3 சுற்று சூழலை பாதுகாப்போம்.
- மேற்கண்ட மூன்று தலைப்புகளில் ஓவிய போட்டி நடைபெறுகிறது.
இதில் மாவட்டத்தில் 27 பள்ளிகளில் இருந்து 135 மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு கல்வி செய்திகள் மாத இதழ் பொன்.பலவேசராஜ் செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக