வெள்ளி, 31 மே, 2024

பிரதமர் மோடி நடந்தால், நின்றால், அமர்ந்தால் குற்றமா? பிரதமர் மோடியின் தியானத்தை எதிர்ப்பது அநாகரீகம் மட்டுமல்ல, அத்துமீறல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி களுக்கு பதிலடி தந்த பாஜக!!!

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது பற்றிய செய்தியாவது:-

பிரதமர் மோடியின் தியானத்தை எதிர்ப்பது அநாகரீகம் மட்டுமல்ல, அத்துமீறல்



மக்களவத் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு மே 30-ம் தேதி மாலையிலிருந்து கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்து வருகிறார். 


இதை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், எப்போதும் பிரதமர் மோடியை எதிர்த்து வருபவர்களும் எதிர்த்து வருகின்றனர்


பிரதமர் மோடியின் தியானத்தை, கடவுள் வழிபாட்டை நாடகம் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.


பிரதமர் மோடி எதைச் செய்தாலும் எதிர்த்து ஆக வேண்டும் மனநிலையில் பலர் உள்ளனர்.


பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை திசை திருப்ப முயன்று தொடர்ந்து தோற்று வருகின்றனர். 


இந்த வீண் புரளி பேசும் விளம்பரப் பிரியர்களை பற்றி பற்றி கவலைப்படத் தேவையில்லை. 


எங்கு சிகிச்சை அளித்தாலும் குணமாகாத நோய் அது.


கடவுளை எப்படி வழிபடுவது, எப்படி தியானம் செய்வது, எப்படி சூரிய வழிபாடு செய்வது என்பதெல்லாம் அவரவர் விருப்பம்.


 அதில் தலையிட மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படி தலையிடுவது அநாகரீகம் மட்டுமல்ல அத்துமீறல்


பிரதமர் மோடி சிறு வயது முதலே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். 


சிறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அவருக்கு துறவியாகும் கனவும் இருந்தது. இந்தியா சுதந்திரத்திற்கே அடித்தளமிட்ட, மகாத்மா காந்தி போன்ற தலைவர்களுக்கு உத்வேகம் அளித்த சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் துறவியாகும் ஆசையும் பிரதமர் மோடிக்கு இருந்துள்ளது.


இந்து மதத்தின் அற்புதமான வழிகாட்டல்களை முழுமையாக உணர்ந்து பின்பற்றி வருகிறார்


சனாதன தர்மத்தின் தத்துவங்களை தாத்பரியங்களை புரிந்து நடப்பவர்.

மோடி அற்புத சித்தர்..

அன்பும் ஆன்மீகமும் தன் வாழ்க்கையின் அடிப்படை நெதிகளாகக் கொண்டு கொண்டு மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்து , கண்ணுக்கு இமைப்போல மக்களை காத்து , அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு, உன்னத லட்சியத்தோடு ஆட்சி செலுத்தி வரும் அற்புத சித்தர். 


பிரதமர் மோடி அவர்களின் எண்ணங்களை, செயல்பாடுகளை,

தொலைநோக்கு திட்டங்களை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.


 அதனால்தான் இரண்டு முறை இமாலய வெற்றியைப் பெற்று,

வருகிற 2024 ஜூன் 4ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இறைவன் அருளோடு பாரத மக்கள் அளிக்க இருக்கின்றனர்.


மக்களவைத் தேர்தலுக்காக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக உண்ண, உறங்க நேரமின்றி உழைத்த அவர், தன்னைப் புதுப்பித்துக் கொள்ளவும், நாட்டு மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யவும், பிறக்கப் போகும் புதிய பாரதத்திற்காகவும், சுவாமி விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்த அதே இடத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்கிறார். 


இதில் மற்றவர்களுக்கு என்ன சிக்கல் என்பது தெரியவில்லை



ஆன்மிகம், தியானம், யோகா, பிரார்த்தனை, சூரிய வழிபாடு ஆகிய நம் பாரதிய கலாசாரத்தின் மீது முற்றிலும் நம்பிக்கை இல்லாத, மண் வாசனையறியாத ஒரு கூட்டம் பிரதமர் மோடியின் தியானத்தை எதிர்க்கிறது. 


பிரதமர் மோடியை வீழ்த்த முயன்று தோற்று தோற்று போனவர்கள், தோற்று போகப் போகிறவர்கள், பிரதமர் மோடி நடந்தால், நின்றால், அமர்ந்தால் குற்றம் என்கிறார்கள்.


 இப்படி அமர்ந்து தியானம் செய்யக் கூடாது, 


அப்படி அமரக்கூடாது என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்.


 இந்த புலம்பல்களை, வெற்று கூச்சல்களைப் பார்க்கும்போது, ஆடத் தெரியாதவன், வீதி கோணல் என்றான் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது*


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக