சனி, 1 ஜூன், 2024

காவல்துறையில் கருப்பு ஆடுகள்??தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பின் கலெக்டர் எஸ்பி மாற்றமா? முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆதிக்க சக்திகளின் தவறை சுட்டிக்காட்டுபவர்கள்  மக்கள் நலனில் அக்கறை கொண்ட பத்திரிகையாளர்கள் சமூக சேவகர்கள், அரசியல் பிரமுகர்கள் மக்களுக்காக துணிச்சல் உடன் போராடினால் உயிருடன் வாழ முடியுமா? என்ற எண்ணம் தான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழக பாஜக  செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார் 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


ஊழல்,கொலை, கொள்ளை, கலவரம் நடக்காமல் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழக மக்கள் மகிழ்ச்சிக்கும் பணி செய்யக்கூடிய நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும்.


மாற்றமா???

தமிழகத்தில் தேர்தல் முடிவுக்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாற்றம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு கொண்டு வருகிறது. 


தமிழகத்தில் கலவரம் ஏற்படும் மாவட்டங்கள், ஜாதிய படுகொலைகள் நடக்கும் ...

தென் மாவட்டங்கள், கொலை கொள்ளை வழிப்பறி போன்ற குற்றங்கள் நடக்கும் மாவட்டங்கள், 

அரசியல் மற்றும் தொழில் ரீதியாக 

படுகொலைகள் அதிகம் நடக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்கள் என தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை ஆய்வு செய்து அதற்கேற்றார் போல திறமையுடன் செயல்பட்டு, குற்றங்களைத் தடுக்கக்கூடிய, ஊழலுக்கு இடமளிக்காத, தமிழகத்தின் அமைதியையும் வளர்ச்சியையும் சிந்திக்க கூடிய நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு முக்கிய பணியிடங்களில் பணியாற்ற வாய்ப்பு உருவாக்க வேண்டும். 

திமுக அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் கொடுக்கும் பட்டியல் படி தான் கலெக்டர் எஸ்பி க்கள் மாற்றமா!!!

தற்போது எனக்கு இந்த மாவட்டம், அவருக்கு அந்த மாவட்டம்,  என் மாவட்டத்தில் இந்த காவல்துறை அதிகாரிகள் தான் வேண்டும், இவர்தான் மாவட்ட ஆட்சித் தலைவராக வரவேண்டும் என டிஆர்ஓ, தாசில்தார் உட்பட்ட வருவாய்த் துறையிலும் மேல்மட்ட அதிகாரிகள் முதல் இன்ஸ்பெக்டர் அளவிலான கடை நிலை அதிகாரிகள் வரை திமுக அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள் கொடுக்கும் பட்டியல் தான் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெளியிடப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. 


ஆட்சித்துறை, காவல்துறை என

இரு கண்களாக தமிழகத்தை பாதுகாக்கும் உள்துறையை  தன்னிடத்திலே வைத்திருக்கின்ற முதல்வர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு 

நேர்மையான காவல் அதிகாரிகளை,

ஆட்சி துறை அதிகாரிகளை 

கண்டறிந்து அவர்களுடைய கடந்த கால செயல்களை ஆராய்ந்து அவர்களுடைய திறமைக்கேற்றவாறு 

தமிழகத்தின் அமைதி, வளர்ச்சியை,மக்கள் நலனை கருத்தில் கொண்டு

உரிய இடத்தில் பணி வழங்க வேண்டும்.

கூலிப்படை அதிகரிப்பு 

திமுக அரசின் கையாலாகாத தனத்தால் முன் எப்போதும் இல்லாத அளவு தமிழகம் முழுக்க கூலிப்படைகளின்  ஆதிக்கத்தால் நடைபெற்று வரும் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. 


ஒரே நாள் இரவில் ஐந்துக்கு மேற்பட்ட கொலைகள்,கொள்ளைகள்,

வழிப்பறிகள் என நாள்தோறும் பல மாவட்டங்களில் நடந்து வரும் நிகழ்வுகள் தனி மனித பாதுகாப்புக்கு அச்சுத்தல் ஏற்படுத்தி வருகின்றன. 


உலக அளவில் புகழ்பெற்ற தமிழகத்தின் காவல்துறையில் செயல்பாடு குறித்து தற்போது மிக அதிகமான விமர்சனம் இருந்துள்ளது. 


உதாரணத்திற்கு கூலிப்படையினரால் நடைபெறும் அரசியல் படுகொலைகள் சாதிய படுகொலைகள் பத்திரிகையாளர் மீது கொலை முயற்சி என திமுக அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து நடந்த பயங்கரங்களை பட்டியலிட்டு பார்த்தால் தமிழகத்தில் ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை வைத்து துணிச்சலுடன் மக்கள் விரோத தீய சக்திகளின் தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள், மணல் கொள்ளை, கஞ்சா போதை பொருள்விற்பனை, மக்களை கொள்ளையடிக்கும் அரசாங்க பின்புலத்துடன் இயங்கும்

ஆதிக்க சக்திகளின் தவறை சுட்டிக்காட்டிபவர்கள் என மக்கள் நலனில் அக்கறை கொண்ட பத்திரிகையாளர்கள் சமூக சேவகர்கள், அரசியல் பிரமுகர்கள் மக்களுக்காக துணிச்சல் உடன் போராடினால் உயிருடன் வாழ முடியுமா?  என்ற எண்ணம் தான் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையில் நடக்கும் அதிகார போட்டி!!!

காவல்துறையில் நடக்கும் அதிகார போட்டியால் பணம் கொழிக்கும் மாவட்டங்களில் பணி செய்ய அமைச்சர்களின் வீட்டில் காத்துக் கிடக்கும் காவல்துறையின் உயரதிகாரிகளின் நிர்வாக சீர்கேட்டால் கலைகளை வளர்த்த இன்று தமிழகம் கொலைகளை வளர்க்கும் தமிழகமாக மாறி உள்ளது வெட்கக்கேடானது.


உதாரணத்திற்கு சென்னை புறநகரில் பயங்கர ரவுடிகளை அடக்குவதற்காக போடப்பட்டதாக சொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி மாவட்டத்திலுள்ள ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் உயர் காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் வெள்ளை மனதுடன் நடந்து கொள்ளாமல் ரவுடி ராஜ்ஜியம் நடத்தி வந்ததையும் அவர் பதவியேற்ற பிறகு அந்த மாவட்டத்தில் நடந்த பல கொலைகளை கண்டும் காணாமல் இருந்து ரவுடிகளை காப்பாற்றி வந்தது நாடறிந்த விஷயம். 

என்னதான் நடக்கிறது???

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்  என்று சொல்லப்பட்ட அந்த போலித்தனமான காவல்துறை அதிகாரி ஓய்வு பெறுவதற்கு முன் நேற்று முன்தினம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.


 மறுநாள் பணி நீக்கத்தை ரத்து செய்வதாக அரசு அறிவிக்கிறது.



தான் பணி செய்த இடத்தில் குற்றப் பின்னணிக்கு ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்த இந்த அதிகாரிக்கு பணி ஓய்வுக்கு முன்பு நீக்கப்பட்ட போதும் அழுத்தம் கொடுத்து ஒரே நாளில் உத்தரவை மாற்றம் செய்தது யார்?


இதுபோன்று பல மாவட்டங்களில் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க வேண்டிய அதிகாரிகள் ரவுடிகளை ஒழிப்பதற்காக நியமிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டு ரவுடிகளை வேட்டையாடாமல் அவர்களோடு உறவு கொண்டு வருவது பல கொலைகளுக்கு வழி வகுப்பதாக இருக்கிறது என்பதையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும். 


இது போன்ற அதிகாரிகளை இனம் கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை அளிக்க வேண்டும்.


மேலும் இதுபோன்று தமிழகம் முழுக்க உள்ள மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைசீர்குலைக்கும் கொலை,கொள்ளை வழிப்பறிகளை தடுக்காமல் தடுக்காமல், 

லஞ்ச லாவண்யத்தை ஊக்குவித்து கருப்பு ஆடுகளாக செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகளை,

தமிழக காவல்துறை, ஆட்சித்துறை  பொறுப்பு அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் கண்டறிந்து உரிய விசாரணை நடத்தி மக்களையும் தமிழகத்தையும் காக்கக்கூடிய நடுநிலையான துணிவான, தகுதியான காவல்துறை அதிகாரிகளை, ஆட்சித் துறை அதிகாரிகளை தேர்தல் நடைமுறைக்கு பிறகு நியமிக்க வேண்டும்.


ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழக பாஜக 

மாநில செய்தி தொடர்பாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக