சனி, 1 ஜூன், 2024

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 2-6-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 


முத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.



        தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் விநாயகர், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமஹா-காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், ஸ்ரீவாராஹி அம்மன், மங்களம் தரும் சனீஸ்வரர், தியான ஆஞ்சநேயர், மஹாசரஸ்வதி, மஹாலெட்சுமி உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 

  இக்கோயிலில் வருஷாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மஹா பூர்ணாகுதியும், மஹாபிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், மஹாசரஸ்வதி, மகாலெட்சுமி, குருமகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பரிவாரதேவதா சமேத தெய்வங்கள் மற்றும் மூலஸ்தான வருஷாபிஷேக விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. 

    தொடர்ந்து, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா-காலபைரவருக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், புனுகு உள்ளிட்ட 16வகையான அபிஷேகம், யாகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

     விழாவில் மலேசியா தொழில்அதிபர்கள் சேகர், ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் பக்தர்களுக்கு அன்னதானத்தை தொாடங்கி வைத்தனர். 

     விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் விழாக் குழுவினர், மகளிர் அணியினர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக