திங்கள், 30 அக்டோபர், 2023

வியாபார கடைகள் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் ஆதரவு உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வியாபார கடைகள் ஏலம் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பார்வையாளாராக பரபரப்புடன் வியாபாரிகளும் கலந்து கொண்டதால் பரபரப்பு

 thoothukudileaks 30/10, 2:21 PM] 

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் இன்று (30-10-2023) காலை 11 மணியளவில் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

வியாபார கடைகள் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் ஆதரவு உடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வியாபார கடைகள் ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பார்வையாளாராக  வியாபாரிகளும் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

ந.க.எண் எச்1/1240/2023

15) தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றத்தின் 30.06.2023ம் தேதிய 342 ஆம் எண் தீர்மானத்தில்,

சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்துநிலையத்தில்

(பழைய பேருந்து நிலையம்) கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகளுக்கான குத்தகை

உரிமத்திற்கு (உரிமம் ஒப்படைக்கும் நாள் முதல் மூன்றாண்டு காலத்திற்கு) பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 09.10.2023 அன்று பொது ஏலம்

மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைபெறும் என தெரிவித்து அறிவிப்பு தினசரி நாளிதழில் 24.09.2023 அன்று வெளியிடப்பட்டது.

அதன்பேரில் 09.10.2023 ( திங்கள்கிழமை ) அன்று மாலை 2 மணி முதல் 3.00

மணி வரை மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலம்

கோர எந்த நபரும் விண்ணப்பிக்காத நிலையில் மாலை 3.30மணியளவில்

ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் முன்னிலையில் வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகள் துணை ஆணையர் அவரால் திறக்கப்பட்டது. மேற்படி ஒப்பந்தப்புள்ளிகள்  கடைகளுக்கு வரப்பெற்றுள்ளது.

திமுக கவுன்சிலர்கள் 

அதிமுக கவுன்சிலர்கள் 


தூத்துக்குடியில் புதியதாக கட்டப்பட்ட ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் 120 கடைகள்  

அண்ணா பேருந்து நிலையத்தில் (பழைய பேருந்து நிலையம்) தரை தளம் மற்றும்

மூன்று தளத்துடன் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாக கடை உரிமத்திற்கு 

ஒப்பந்தப்புள்ளி வரப்பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியால்

நிர்ணயம்

செய்யப்பட்ட ஏலம்

மற்றும்

ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது 

ஆரம்ப மாத வாடகை

வரப்பெற்ற

ஒப்பந்தப்புள்ளியில்

குறிப்பிடப்பட்டுள்ள

மாத வாடகை தொகை மற்றும் ரூ.காப்புத்தொகை செலுத்திப் ஒப்பந்தப்புள்ளி வழங்கியவர்

விவரம் தீர்மானத்தில் சமர்ப்பிக்கப்பட்டது 

 மேலும் மேற்படி 1 முதல் வரிசை எண்.46 வரையிலான (வரிசை எண்.12ஐ

தவிர்த்து) கடைகளின் உயர்ந்தபட்ச கேள்விதாரர்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக

மாமன்ற அனுமதி பெற்று எடுக்கப்படும் நடவடிக்கைக்கான கால விரயத்தை தவிர்க்கும் விதமாகவும், கால விரயத்தால் ஏற்படக்கூடிய நிதி இழப்பினை தவிர்க்கும் விதமாகவும்,

பேருந்து நிலையம் 08.10.2023 அன்று திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவும், அவசர அவசியம் கருதி இம்மாநகராட்சி வருவாயை கருத்தில் கொண்டு

மாமன்றத்தின் அனுமதியை எதிர்நோக்கி மாண்புமிகு மேயர் அவரிடம் முன்அனுமதி‌ பெற்று நடவடிக்கை மேற்கொண்டதை மாமன்றம் அங்கீகரித்துள்ளது எனவும் மேற்படி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் (பழைய பேருந்து

நிலையம்) உள்ள வணிக வளாக கடைகளில் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி

கோரியது போக மீதம் உள்ள கடைகளுக்கு ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி கோர மாமன்றத்தின் அனுமதி வேண்டப்பட்டு நிறைவேற்ற படுகிறது.

மேற்படி G2,G3,G4ஆகிய கடைகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில்

மேற்படி கடைகள் முன்பு அமைந்துள்ள காலி இடத்தை உரிமம்தாரர்கள் பயன்படுத்திட

வழிவகை இருப்பதால் மேற்படி காலி இடத்தின் அளவிற்கேற்ற வாடகை மற்றும்

ஒப்பந்தப்புள்ளி வாடகை தொகை சேர்த்து மேற்படி கடைகளுக்கு மாத வாடகை நிர்ணயம்

செய்திட மாமன்றத்தின் அனுமதி . கோரப்பட்டு அனைத்து கவுன்சிலர்கள் எந்தவித ஆட்சேபமின்றி ஏகமனதாக நிறைவேற்ற பட்டது.

வியாபாரிகள் நன்றி தெரிவிப்பு !!!

இதனால் தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் கடைகள் ஏலம் எடுத்திருந்த  வியாபாரிகள் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் மினிபஸ் உள்ளே அனுமதியா?

இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்...

மினிபஸ் உள்ளே இருந்து செல்ல அனுமதி இல்லை

ஆயினும் சிறப்பு தீர்மானமாக அனைத்து மினிபஸ்கள் நிற்க கூடாது மற்ற பஸ்கள் மற்றும் பொதுமக்கள் இடைஞ்சல் இல்லாமல்...பேருந்து நிலையத்தில் ஒன்றிரண்டு மினிபஸ் கள் உள்ளே வந்து உடன் செல்லலாம் அதற்கு மாநகராட்சி கட்டணம் வசூலிக்கும் என்று இருக்கிறோம் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக