thoothukudileaks 31-10-2023
photo news by arunan journalist
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ....
தொடர்ந்து தென் மாவட்ட விளையாட்டு மாணவ வீரர்களை வஞ்சித்து ஏமாற்றி வரும் மனோன்மணி பல்கலைக்கழகம் குறித்து தாங்கள் நடவடிக்கை உடன் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி பிரபல வழக்கறிஞர்எஎஸ்.ஆர்.செல்வம் கிறிஸ்டோபர் அவசர குற்றச்சாட்டு புகார் அனுப்பி உள்ளார்.
இது பற்றிய செய்தியாவது:-
யாரையும் போட்டிற்கு அனுப்பக்கூடாது என்ற முடிவில் மனோன்மணி பல்கலைக்கழகம் செயல்பட்டு கொண்டு இருப்பது தெளிவாகிறது.
ஆகவே சமூகம் அவர்கள் விளையாட்டையே நம்பி உள்ள தூத்துக்குடி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாணவர்களை நியாயமாக போட்டி நடத்தி தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் செல்வம் கிறிஸ்டோபர் B.com.,B.L., மனுவில் முழு விவரமாவது:-
அனுப்புநர்
எஎஸ்.ஆர்.செல்வம் கிறிஸ்டோபர் B.com.,B.L.,
வழக்கறிஞர்
ஜே.வி.ஏ.சட்ட அலுவலகம், 93E, டூவிபுரம் 2ம் தெரு, முதல்மாடி, சி.எஸ்.ஐ.சர்ச் அருகில், தூத்துக்குடி -628002.
செல்-9894068874
பெறுநர்
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்,
தலைமைச்செயலகம்,
சென்னை
மதிப்பிற்குரிய ஐயா,
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செயல்படும் அனைத்து கல்லூரிகளும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது.
தேசிய அளவில் All india University போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டி மாணவர்கள் தேசிய விளையாட்டு வீரராகவும் உலக அளவில் சிறந்த வீரராகவும் உருவாக சிறந்த வாய்பாக இருக்கிறது.
இந்த போட்டியில் மாணவர்களுக்கு Form -3, Form-2 வழங்கிவருகிறார்கள். இதனால் இந்த போட்டிக்கு அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களை அனுப்பி வைக்கிறது.
form -2 கையில் இருந்தால் வேலை வாய்ப்பு உறுதியாக அரசால் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.
விளையாட்டுக்காக தங்கள் வாழ்வை அர்பனித்து விளையாட்டை உயிராக நேசித்து மாணவர்கள் இந்த போட்டிக்காக பல நாட்கள் பயிற்சி எடுத்து காத்துருப்பார்கள்.
மேற்கண்ட மூன்று மாவட்டத்திலும் சிறு வயது முதல் விளையாட்டு ஆர்வத்துடன் டேக்வாண்டோ பயிற்சி செய்து தமிழக அரசு நடத்தும் பள்ளிக்கல்வித்துறை போட்டியில் வெற்றி பெற்றுள்ள பல மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.
அதைபோல மற்ற விளையாட்டிலும் வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஆர்வத்துடன் தங்கள் மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கடந்து ஆண்டு யோகா ஆர்சரி, பென்சில் சிலாட், வெய்ட் லிப்டிக், டேக்வாண்டோ, பென்சிங் போன்ற பல போட்டிகளுக்கு தேர்வுகள் நடத்தியது (Selection Trails) அதில் தேர்வான மாணவர்களை தேசிய டேக்வாண்டா போட்டிக்கு அனுப்பி வைத்தது.
ஆனால் இந்த ஆண்டு பணம் (Fund) இல்லை என்று சாக்கு சொல்லி பல விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வு நடத்தவில்லை. இதனால் விளையாட்டையே வாழ்க்கையாக நினைத்து கொண்டிருக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அதே போல 31.10.2023 அன்று நடைபெறும் டேக்வாண்டோ தேர்வு கண்துடைப்பாக நடத்தும் தேர்வாக தெரிய வருகிறது. இதனால் மாணவர்கள் தங்களை பல்கலைக்கழகம் ஏமாற்றுவதாகவே உணர்கிறார்கள். 02.11.2023 அன்று போட்டி தொடங்குகிறது. அதனால் மாணவர்கள் 02.11.2023 ராஜஸ்தானில் இருக்கவேண்டும் என்ற நிலையில் 31.10.2023 தேர்வு நடத்தினால் எவ்வாறு ராஜஸ்தான் செல்ல முடியும். கடந்த ஆண்டு பென்சில் சிலாட் போன்ற போட்டிக்கு தேர்வு கண்துடைப்பாக நடத்திவிட்டு தேசிய போட்டிக்கு வீரர்களை அனுப்பாமல் ஏமாற்றிவிட்டார்கள்.
மேலும் இந்த ஆண்டு தேர்வுக்குரிய சட்ட விதிகளும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளது. கடைசி இரண்டு ஆண்டுகள் தேசிய விளையாட்டில் பதக்கம் வென்று இருக்க வேண்டும் என்று சட்ட விதிகள் உள்ளது. ஆனால் மற்ற பல்கலைக்கழகம் தகுதியான மாணவர்களை போட்டி நடத்தி தேர்வு செய்கிறது.
ஆனால் அவ்வாறு போட்டி நடத்த முடியவில்லை என்றாலும் தேர்வு நியாயமாக இருக்க வேண்டும் அதற்கு எதிராக சட்ட விதிகள் உள்ளது. மேலும் பல்கழைகழகங்களில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களாகவும் இருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும் மாணவர்கள் எப்படி இதற்கு முன்னர் பங்கு பெற்றிருப்பார்கள். யாரையும் போட்டிற்கு அனுப்பக்கூடாது என்ற முடிவில் பல்கலைக்கழகம் இருப்பது தெளிவாகிறது.
ஆகவே சமூகம் அவர்கள் விளையாட்டையே நம்பி உள்ள தூத்துக்குடி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாணவர்களை நியாயமாக போட்டி நடத்தி தேசிய போட்டிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Copy to:
1. The Honourable Shri Anuray singh,
Minister for Youth Affairs and sports,
Thakur Room No.560,
A wing Shastri,
Bhawan,
New Delhi-110001.
2.டாக்டர்.எஸ்.ஆறுமுகம்,
உதவி பேராசிரியர் & தலைவர் i/c,
உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழகம்,
அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி-627021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக