தூத்துக்குடியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் பி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.
இது பற்றிய செய்தியாவது:-
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணியை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி துவங்கிவைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
அதன் அடிப்படையில் அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்டக்களுக்கும் பூத் கமிட்டி பணியை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளரை நியமனம் செய்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 28-10-2023 தூத்துக்குடி டிஎஸ்எப் கிரான்ட் பிளாஸா ஹாலில் நடைபெற்றது .
மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளரும் , அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பி.ஜி.ராஜேந்திரன் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர், தூத்துக்குடி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி வாரியாக கேட்டறிந்து, ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாநில நிர்வாகிகள் டாக்டர் ராஜசேகர், ஏரோமிஸ், தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு, கிருஷ்ணாராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, பகுதி கழகச் செயலாளர்கள் முருகன், சேவியர், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, நகரச் செயலாளர்கள் மகேந்திரன், காயல்மௌலானா, முன்னாள் கவுன்சிலர்கள் சுடலைமணி, சென்பகசெல்வன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், பேரூராட்சி கழக செயலாளர் ரவிச்சந்திரன், காசிராஜன், வேதமாணிக்கம், செந்தில்ராஜகுமார், ஆறுமுகநயினார், துரைச்சாமிராஜா, அசோக்குமார், செந்தமிழ்சேகர், கிங்சிலிஸ்டார்லின், சோமசுந்தரம், குமரகுருபரன், சார்பு அணி செயலாளர்கள் வழக்கறிஞர் யு.எஸ்.சேகர், நடராஜன், டேக் ராஜா, ஜெ.ஜெ.தனராஜ், பில்லா விக்னேஷ், கே.ஜே.பிரபாகர், மாவட்ட கவுன்சிலர் அழகேன், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், நிர்வாகிகள் சத்யாலெட்சுமணன், எம்.பெருமாள், திருச்சிற்றம்பலம், டைகர் சிவா, உடன்குடி உரக்கடை குனசேகரன், சுரேஷ்பாபு, பூந்தோட்டம் மனோகரன், ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், ஆத்தூர் கார்த்திகேயன், மகாலிங்கம், லிங்ககுமார், ஓடை கண்ணன், கந்தன், நாசரேத் ஜூலியட், ஒன்றிய துணை சேர்மன் அப்பாதுரை, புதுக்குளம் பஞ்சாயத்து தலைவர் பாலமேனன், வக்கில் முனியசாமி, சரவணபெருமாள், மனுவேல்ராஜ், எஸ்.கே.மாரியப்பன், அண்ணை வி.ஜி.சரவணன், பண்டாரவிளை பாஸ்கர், வெங்கடேஷ், பிராங்கிளின் ஜோஸ், கே.டி.சி.லெட்சுமணன், உதயகுமார், நிலா சந்திரன், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, யுவன்பாலா, பாலஜெயம், சாம்ராஜ் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு அதிமுக நிர்வாவகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக