திங்கள், 31 ஜனவரி, 2022

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரடி அறிவிப்பு அமைச்சர் கீதாஜீவன் தொடர்ந்து தங்களை புறக்கணித்து அவமதிப்பு செய்வதாக குற்றச்சாட்டு

 தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாநகர , மாவட்ட செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. 


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில்  திமுக கூட்டணியில் அங்கம் வகித்து இரண்டு தொகுதிகளில் வெற்றிப்பெற்று கூட்டணி கட்சியான திமுக விற்கு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு  கடுமையாக உழைத்து சட்டமன்றத்தில் இரண்டு உறுப்பினர்களை கொண்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான கீதாஜீவன்   தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.



2022-ல் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகரம் பகுதியில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதற்கு ஒரு இடம்கூட வழங்காமல் தொடர்ந்து புறக்கணித்தும் தூத்துக்குடி மாநகரத்தின் சார்பில் மாநகர நிர்வாகிகளை அழைத்து பேசாமலும் அவமதித்து வருகிறார்.


அதனால் இந்த தேர்தலில் தூத்துக்குடி மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலை தூத்துக்குடி மாநகரத்தில் புறக்கணிப்பதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.


30.01.2022 இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்ற  மசூராவில் முடிவெடுக்கப்பட்டது இதில் மாவட்ட மாநகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


இவன்

தமுமுக மற்றும்

மனிதநேய மக்கள் கட்சி

தூத்துக்குடி மாநகரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக