செவ்வாய், 5 மார்ச், 2024

2024 மார்ச் 8 -ல் தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் பட்டிமன்றங்கள் ஆன்மீக இன்னிசை கச்சோி, என பல்வேறு நிகழ்ச்சிகள் நனட பெறுகின்றன.

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂

photo news by

 சண்முகசுந்தரம்

தூத்துக்குடி மூத்த செய்தியாளர்

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி வருகின்ற 8ம் தேதி இரவு முழுவதும் நடைபெறுகிறது. தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தகவல்



 இது பற்றிய செய்தியாவது :-

     தூத்துக்குடி சிவன் கோவிலில் வரும் 8-ம் தேதி சிவராத்திரி விழா மற்றும்  பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


 தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி திருவிழா வரும் மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.


    மாசி மாதத்தின் பிரதோஷமும் மகா சிவராத்திரியும் இந்த ஆண்டு ஒரே நாளில் வருகிறது.


மார்ச் 8ம் தேதி வரும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வது நல்லது. அதே நாள் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரியும் வருகிறது.


இந்த இரண்டும் ஒரே நாட்களில் வருவதால் சிவன் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் கலந்து கொண்டு தாிசனம் செய்வது மிக சிறப்புடையதாக இருக்கும்.


இந்த மகா சிவராத்திரிப் பெருவிழா நாளில் கோவில் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்.


  பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஒரே நாளில் வருவதையொட்டி பக்தர்களின் நலன்கருதி அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்து, சிவன் கோவில் உள் அரங்கத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


 பின்னர், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் கல்யாண சுந்தரம் (எ) செல்வம் பட்டர் ஆகியோர்  அளித்த பேட்டியில்:


    பிரதோஷம் மற்றும் சிவராத்திரி ஆகிய இரு நிகழ்வுகள் ஒரே நாளில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.


 இதனையொட்டி வழக்கம் போல் நடைபெறும் பிரதோஷ வழிபாடு மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, 5 மணிக்குள் நிறைவு பெறும். அதன் பின் சிவராத்திரி நிகழ்வையொட்டி கோவிலுக்கு ஓம் நமச்சிவாய எழுத வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கட்டமைப்பு பணிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும்.


 அன்று இரவு 10, 12, 2, 5 என நான்கு கால பூஜைகள் நடைபெறும் தொடர்ந்து அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் எளிதில் வந்து தரிசனம் செய்து கொள்வதற்கான உள்கட்டமைப்புகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.


 உள்ளே வந்து, வெளியே செல்வதற்கான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்து காவல்துறை மூலம் சீர்செய்யப்படும். இந்துசமய அறநிலையத்துறையும் அறங்காவலர் குழுவும் இணைந்து பக்தர்களின் நலன் கருதி இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் பட்டிமன்றங்கள் ஆன்மீக இன்னிசை கச்சோி, என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


 2024 இந்தாண்டு சிறப்பான முறையில் இரு நிகழ்வுகளையும் பக்தர்கள் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 அனைத்து தரப்பினரும் பிரதோஷம், சிவராத்திரியை முன்னிட்டு அச்சமின்றி வந்து செல்வதற்கு காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


சிவராத்திரி திருவிழாவை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கோவில் வளாகத்தில் நான்கு இடங்களில் பெரிய அகன்ற எல்ஈடி திரை மூலம் அபிஷேகம், பூஜைகள் ஒளிபரப்பும் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.


 கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை, கோவில் பின்புறம் தனியார் பள்ளி இருக்கும் சாலை ஓரங்களில் நிறுத்த கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்கள்.


பின்னர் பெருமாள் கோவில் அறங்காவல்குழு தலைவர் செந்தில்குமார் பேசுகையில்....

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கல்மண்டபத்துடன் கட்டுமான பணிகள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அறிவுரையின் படி நல்லமுறையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.


பக்தர்கள் வழக்கம் போல் வந்து செல்லும் நிலை இருக்கிறது. இந்த கும்பாபிஷேக பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக நடைபெறுகின்ற கட்டுமான பணிகளையும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் ஞாயிற்றுகிழமை முதல் வௌியில் நின்று சாமி தாிசனம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டள்ளது.


 பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் கட்டுமான பணி நடைபெறும் வரை பக்தர்கள் முழுமையான ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.


   பெருமாள் கோவில் அறங்காவல்குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல்குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், சிவன் கோவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காலர்கள் முருகேஷ்வரி, ஜெயபால், பாலசங்கர், மந்திரமூர்த்தி, மற்றும் மாாிமுத்து, அர்ச்சகர்கள் சண்முகசுந்தரம் பட்டர், சோமசுந்தரம் பட்டர் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக