▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
5-8-2024 photo news
by sunmugasunthram Reporter
சித்தர் பீடத்தில் ஆடி மஹாளாய அமாவாசை லட்சார்ச்சனையுடன் கூடிய மிளகாய் வற்றல் மஹா யாக வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் "ஆடி மஹாளய அமாவாசை"யை முன்னிட்டு லட்சார்ச்சனையுடன் மிளகாய் வற்றல் சிறப்பு மஹா யாகம்
சற்குரு சீனிவாச சித்தர் காலை 8.10மணிக்கு மஹா யாகத்திற்கான வழிபாடுகளான கணபதி, நவக்கிரக ஹோமம், மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் ஹோமத்துடன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, காலை முதல் இரவு வரை லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெற்றது.
காலை 10.20மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம் தொடங்கியது.
இன்று 5-8-2024 மதியம் 12மணிக்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கும், மஹா காலபைரவருக்கும் மஞ்சள், பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர், தேன், விபூதி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16வகையான அபிஷேகமும் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் மதியம் 1.20மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதில், பக்தர்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன்தொல்லைகள், எதிரித்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக நீங்கிடவும், இல்லத்தில் பணம் கொழித்து செல்வவளம் பெருகிடவும், நோயில்லாத நல்வாழ்வு அமைந்திடவும், திருமண வரன், குழந்தை பாக்யம் கிடைத்திடவும், தகுதிக்கேற்ப அரசு வேலை கிடைத்திடவும், தொழில் விருத்தியாகிடவும், பருவமழை பெய்து விவசாயம் சிறப்பாக நடைபெறவும், உலகில் இயற்கை பேரிடர்கள் இல்லாமல் போகிட வேண்டியும் மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் திரளாக வந்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு மஹா தீபாராதனையுடன் மஹா யாக வழிபாடுகள்.
மஹா யாக வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை சித்தர்பீடம் வழிபாட்டுக் குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளார் கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக