வியாழன், 30 மே, 2024

1000 ஆண்டு பழமையான ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் குளித்தலை ஆஞ்சநேயர் கோயில் அருகே நகராட்சி நிர்வாகம் கட்டும் கழிப்பறைக்கு நிரந்தர தடை விதிக்க தமிழக அரசிற்கு இந்து சேனா கோரிக்கை

குளித்தலை ஆஞ்சநேயர் கோயில் அருகே நகராட்சி நிர்வாகம் கட்டும் கழிப்பறைக்கு நிரந்தர தடை விதிக்க தமிழக அரசிற்கு இந்து சேனா கோரிக்கை விடுத்துள்ளனர்.

1000 ஆண்டு பழமையான ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் 


இது பற்றிய செய்தியாவது:-

கரூர் மாவட்டம் குளித்தலையில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் மற்றும் உப சன்னதி ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது.



 இந்தக் கோயில்களுக்கு குளித்தலை சுற்றுவட்டாரத்தில் மட்டும் இல்லாமல் மற்ற பகுதிகளில் இருந்தும் இந்து சமயத்தை சார்ந்த பக்தர்கள் இந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள்.


இந்த ஆஞ்சநேயர் திருக்கோயில் மிக விரைவில் முழு திருப்பணிகள் நடைபெற உள்ளது‌.


மேலும் குளித்தலை ஆஞ்சநேயர் பகவானுக்கு என்று இந்த ஒரு தனி ஆலயம் தான் உள்ளது.


இந்த ஆலயத்தின் அருகில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் ஆலயத்தை ஒட்டி ஏற்கனவே உள்ள வடிகால் கால்வாய் மீது கழிப்பறை ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறது.


 திருக்கோயிலுக்கு வருகின்ற பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கிருமி தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


தேர் திருவிழா மற்றும் விஷேச காலங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகம் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள்.


 அவர்களுக்கு பல்வேறு வகையான கிருமி தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு உடனே தமிழக அரசு குளித்தலை நகராட்சி நிர்வாகத்தின் இந்த கழிப்பறை கட்டும் பணிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக இந்து சேனா தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக