thoothukudileaks 29-9-2023
news by arunan journalist
தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநில மாநாடு தமிழர் விடுதலைக் களத்தின் நிறுவனர், இளம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது .
மாநில மாநாடு கூட்டத்தில் பரபரப்பான 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இதுபற்றி செய்தியாவது:-
தமிழர் விடுதலைக்களம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில்... நேற்று 28-9-2023
தேவேந்திரகுல வேளாளர்" அரசியல் அதிகார மீட்பு மாநில
மாநாடு கூட்டம் நடைபெற்றது.
உலகம் எங்கும் வாழக்கூடிய தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சார்பாக
தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கு தமிழர் விடுதலைக் களத்தின் நிறுவனர், இளம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையேற்று மாநாடு கூட்டம் சிறப்பாக நடத்தினர்
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில்.நடைபெற்ற ..
அரசியல் அதிகார மீட்பு மாநில மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்தியவர்கள்.. தூத்துக்குடி தெற்கு அதிமுக மாவட்ட கழகத்தின் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்.
தூத்துக்குடி வடக்கு அதிமுக மாவட்ட கழகத்தின் செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு...
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்
திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழகத்தின் செயலாளர்
தச்சை கணேசராஜா..
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கசாலி
அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபையின் மாநில பொறுப்பாளர் அரவிந்த்ராஜா...
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பார்வதி சண்முகச்சாமி
முன்னாள் மாவட்ட நீதிபதி ராமலிங்கம்
தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் தாளை முத்தரசு
முன்னாள் மாவட்ட பதிவாளர்,*முனைவர் பாலு சுப்பிரமணி... ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்து கொண்டனர்.
முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் அதிகார மீட்பு மாநாட்டு தீர்மானங்கள்.!
தமிழர் விடுதலைக் களத்தின் நிறுவனர், இளம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
2. இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனார்அவர்களுக்கு அரசு விழா அறிவிக்க வேண்டும்.
இந்திய விடுதலை போராட்ட வீரர், மாவீரர் வெண்ணிகாலாடி நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
3.தமிழக அமைச்சரவையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு உரிய அமைச்சர் பதவி பிரதிநிதித்துவம்வழங்கிட வேண்டும்.
4.நீதிபதி நியமனங்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்,
5.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நிர்வாக முக்கியத்துவம்வாய்ந்த பதவி பொறுப்புகளை வழங்க வேண்டும்.
6. நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீட்டிலும், மேயர் பதவி ஒதுக்கீட்டிலும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்கிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
7. உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்திட வேண்டும்.
8.தென் மாவட்டங்களில் ஏற்படுகின்ற சாதி மோதல்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை, அனைத்து சமுதாய பெரியவர்களை கொண்ட நல்லிணக்க குழுவைஏற்படுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
9.வேலைவாய்ப்பு அளித்து சாதி மோதல்களை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கங்கைகொண்டான் சிப்காட்டில் வடமாநில தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். திருநெல்வேலி பகுதியை சுற்றியுள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு கங்கை கொண்டான் சிப்காட்டில் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும்.
10.ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகள் கருங்குளம் ஊராட்சி, புளியங்குளம் கிராமத்தை சேர்ந்ததாகும். ஆட்சியாளர்களும், அகழாய்வாளர்களும் புளியங்குளம் கிராமத்தை திட்டமிட்டு மறைத்து,போலியான தகவல்களை அளித்து வருகின்றனர்.
11. சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
12.காவிரி நீர் வராத காரணத்தினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
காவிரி நீரை முறையாக பெற்று தர வேண்டும்.
13. தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட செண்பக கால்வாய் அணை மற்றும் தலையணைஆகிய அணைகளை போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த வேண்டும்.
14.தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தில் மாவீரர் சுந்தரலிங்க தேவேந்திரருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும்.
15. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட வேண்டும்.!
மேற்கண்ட முக்கியத்துவம் மிக்க 15 தீர்மானங்கள் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மாநாடு நன்றி யுரை
அரசியல் அதிகார மீட்பு மாநாட்டில் அலைகடலென கலந்து கொண்ட தேவேந்திர குல வேளாளர் சமூக உறவுகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியல் அதிகார மீட்பு மாநாடு வெற்றி பெறுவதற்காக இரவு பகலாக அயராமல் உழைத்திட்ட தமிழர் விடுதலைக் களத்தின் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும், பொறுப்பாளர்கள் அனைவருக்கும்உலகமெங்கும் வாழுகின்ற தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.!
இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.
தகவல்
ஊடகப் பிரிவு,
தமிழர் விடுதலைக் களம்,
தமிழர் நாடு,
29.09.2023

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக