சனி, 30 செப்டம்பர், 2023

கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி லீக்ஸ் 30-9-2023

த.சண்முகசுந்தரம்

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மீளவிட்டான் பெரியசாமி திடலில் நடைபெறுகின்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி   இன்று தொடங்கியது .



     வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். 

மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் குருராஜ், மாதேஸ்வரன், கணேசன், லவராஜா, டினோ, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி மண்டலத்தலைவருமான வக்கீல் பாலகுருசாமி வரவேற்புரையாற்றினார். 

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ...


தமிழக முதலமைச்சர் தளபதியார் எல்லா மாவட்டத்திலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டத்திற்கிணங்க இந்த போட்டி நடைபெறுகிறது. 


இதில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. 


காரணம் ஓவ்வொரு அணிகளில் பெயர்களையும் பார்க்கின்ற போது இந்த இளைய சமுதாயத்தினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. என்பதையும் தெரிந்து கொண்டேன். 


இளைய தலைமுறையினர் பங்குபெறும் இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் அனைவரையும் ஓருங்கிணைக்கின்றனர். 


சிலர் போதை பொருளுக்கு அடிமையாகி தடம் மாறி செல்கின்றன அந்த நிலை மாற வேண்டும். 


தம்பி உதயநிதி அமைச்சராக பொறுப்பெற்ற பின் இந்ததுறை மேலும் வலுவடைந்துள்ளது. 


பல்வேறு நாடுகள் மட்டுமின்றி உலகில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகிறார். எல்லாத்துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைவது போல் இந்த துறையும்; சிறந்து விளங்கும் போட்டியில் வெற்றி ஓன்றுதான் இலக்காக இருக்க வேண்டும். நமக்கு எப்போதும் வெற்றி தான் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பேசினார். 



மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் ...


தமிழக முதலமைச்சரின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதை அப்படியே செயல்வடிவமாக செய்து முடித்து காட்டுவதில் நம்முடைய வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனையே சேரும் காரணம் எடுக்கின்ற ஓவ்வொரு முயற்சியையும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுத்துகிறார். 


100 அணிகள் ஓரே நேரத்தில் விளையாட முடியுமா என்று நினைத்தேன். 


ஆனால் இந்த பெரிய மைதானத்தில் 5 உள் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே வரலாற்று சாதனைதான் என்று பேசினார். 



மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்...

 திமுகவில் 23 அணிகள் செயல்படுகின்றன. இருப்பினும் இந்த அணியின் பங்கு முக்கியமானது. 

 எல்லா மனிதர்களுக்கும் உடல் ஆரோக்கியம் முக்கியம் தற்போது உள்ள காலக்கட்டத்தில் இந்த விளையாட்டு போட்டியை 5வயது முதல் 50வயது வரை உள்ளவர்கள் விளையாடுவார்கள் .


சாதாரணமாக ஓரு கம்பு இருந்தால் போதும் யாரும் விளையாடலாம் என்று பேசினார். 



       மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச்செயலாளர் நம்பி பேசுகையில் ...


தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் செயல்படுத்தாத முன்னெடுப்பை இந்த மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் செய்துள்ளார்கள். விளையாட்டு உபகரணங்களில் கட்சியின் அடையாளங்கள் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. 


இது மற்றவர்களுக்கு முன்உதாரணமாக அமைந்துள்ளது. 


இந்த செயல்பாடுகளை எங்களது மாநில செயலாளர் தயாநிதி மாறன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் கொண்டு சேர்ப்பேன். அமைச்சர்கள் நிறைவு விழாவிற்கு தான் பரிசளிக்க வருவார்கள் இங்கு தொடக்க விழாவிற்கே வருகை தந்த முதலாவது அமைச்சராக கீதாஜீவன் உள்ளார். என்பதை நினைக்கும் போது எங்களை போன்றவர்களை மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது. 

      100 அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்குரிய உபகரணங்கள் வழங்கி போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

     இந்நிகழ்ச்சியில் ...

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலளார் கீதாமுருகேசன், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், துணை அமைப்பாளர் சின்னத்துரை, சிறுபான்மை அணி அமைப்பாளர் பொன்சீலன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, நாகராஜன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, ஜெயசீலி, நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ராஜதுரை, மாநகர நெசவாளர் அணி அமைப்பாளர் சீதாராமன், துணை அமைப்பாளர் குமரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, தொழிலாளர் அணி துணைத்தலைவர் செந்தில்குமார், இலக்கிய அணி தலைவர் நலம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜாகண்ணு, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின் அசோகன், துணை அமைப்பாளர்கள் செல்வகுமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், பாலகுருசாமி, சதீஷ்குமார், முத்துராஜா, செல்வம், முனியசாமி, மனோ, பகுதி பொருளாளர் உலகநாதன், மகளிர் அணி ரேவதி, சத்யா, சந்தனமாரி, மற்றும் கருணா, மணி, கணேசன், மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக