thoothukudileaks 19-4-2023
Arunan
வாட்ஸ்அப்ல "இந்த மாதிரி லிங் மெசேஜ் வந்தால் open லிங் தொட்டு திறந்து படிக்க வேண்டாம் என்று
சைபர் கிரைம் உங்க வாட்ஸ்அப் பற்றிய எச்சரிக்கை விடுத்துள்ளது .
இதுபற்றிய செய்தியாவது:-
வேலைவாய்ப்புகளை வழங்குவதாக சொல்லி, நிறைய மோசடிகள் நடந்து வரும்நிலையில், அது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. வளர்ச்சி என்ற நோக்கில் விஞ்ஞானத்தை அணுகினாலும், அதனால் ஏற்படும் வன்முறைகளையும், தவறுகளையும் தடுக்க முடிவதில்லை.
சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறது.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில் இதை தான் தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் இறங்கி உள்ளனர்.
புதிய மோசடி: இப்படி ஒரு மோசடி வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாகவும் நடக்கிறது என்பதுதான் அதிர்ச்சியை கிளப்பி விட்டுள்ளது.. அதுவும் வேலைவாய்ப்பு மோசடி என்று புதிய மோசடி துவங்கி உள்ளதாம்.. நம் நாட்டில் வேலையில்லா பிரச்சனைகள் இதுவரை தீராமல் உள்ளது.. வேலையில்லாமல் எத்தனையோ இளைஞர்கள் தற்கொலையை தேடிக்கொள்ளும் சூழலில், வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடிகளை செய்து காசு பார்த்து வருகிறது ஒரு கூட்டம்..
லட்சக்கணக்கான இளைஞர்கள் வாய்ப்புகளுக்காக வெவ்வேறு வெப்சைட்களில் வேலை பார்க்கிறார்கள். அந்த வகையில் சாட்டிங் மூலம் பணி அமர்த்தலில் ஈடுபட்டுள்ள நிறுவனமான Hirect, அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரங்களை தந்துள்ளது. நாட்டில் வேலை தேடும் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 56 சதவீதம் பேர் வேலை தேடும்போது மோசடிகளால் பாதிக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மெசேஜ்கள்: இந்த மோசடிக்காகவே, புதிய நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறாராம்.. வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பெயரில், எஸ்எம்எஸ் அல்லது மெசேஜ்கள் வாட்ஸ்அப்-க்கு அனுப்பப்படும்.. பிறகு வேலை உறுதி என்பார்களாம்.. தினமும் இவ்வளவு சம்பளம் தருகிறோம் என்று சொல்லி பெரிய தொகையை சொல்வார்களாம். இவ்வளவும் மெசேஜ் மூலமாக வாட்ஸ்அப்களில் வந்து விழும்..
பெரும்பாலும் இந்த மேசேஜ்களில் ஒரு லிங்க் தந்துவிடுவார்கள்.. அந்த லிங்க்கை கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட தரவுகளை திருடி கொள்ள முடியுமாம்.. சில சமயம், யாராவது ஒருவர் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு, கூடுதல் விவரங்களை கேட்பார்கள். பதிவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துமாறு சொல்வார்கள்.
wa.me என்று தொடங்கும் லிங்க் இருக்கும்.. இதற்குள் சென்றால், மறுமுனையில் உள்ளவர் கூடுதல் விவரங்களை கேட்பார்.. ஆனால், அவரிடம் அவர் எதிர்பார்க்கும் எந்த பதிலையும் நாம் தந்துவிடக்கூடாது.. அதனால், இதுபோன்ற மெசேஜ்களை உடனடியாக தவிர்த்துவிட வேண்டும். இதனிடையே, டெல்லி போலீஸாரின் சைபர் கிரைம் பிரிவு ஆன்லைன் மோசடியிலிருந்து நம்மை பாதுகாக்க சில வழிகாட்டுதல்களை தந்துள்ளது.. சில அறிவுரைகளையும் தந்துள்ளது.
ஈமெயில்: குறிப்பாக, "வேலை தேடுவோரை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. அவர்கள் naukari.com. shine.com போன்ற வேலை தேடுவோருக்கான வெப்சைட்களிலிருந்து, செல்போன் நம்பர், ஈமெயில் அட்ரஸ், கல்வித்தகுதி, பணி அனுபவம் போன்ற விவரங்களை திருடுகிறார்கள். அவற்றை பயன்படுத்தி, புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உறுதி என்று கூறி, போலியான தகவல்களை அனுப்புவார்கள்..
எனவே, உண்மையாக வேலை வழங்குபவர்கள் யாரும், வேலைவாய்ப்பு பதிவு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் போன்றவற்றுக்காக பெரிய தொகையை கேட்கவே மாட்டார்கள். மோசடி செய்பவர்கள் ஒரே மாதிரியான மின்னஞ்சல் கணக்குகள், லோகோக்கள் போன்றவற்றை பயன்படுத்தி உண்மையான வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். அதனால், வேலைவாய்ப்பு உதவிக்காக பணம் செலுத்துவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
ஜாக்ரதை: வேலை வழங்குவதாக சொல்லும், நிறுவனம் பற்றி முதலில் ஆன்லைனில் தேடி அறிந்து கொள்ள வேண்டும். அந்த நிறுவனத்தின் மீதான புகார்கள், மதிப்புரைகள் போன்றவற்றை முன்கூட்டியே அதில் நாம் தெரிந்துகொள்ளலாம்.. மதிப்புரைகளில் புகார்கள் அதிகமாக இருந்தால், அவர்கள் ஒருவேளை ஏமாற்றும் கும்பலாக இருக்கலாம்.. மெயில், அல்லது வாட்ஸ்அப்களில் வரும் தகவல்களை அப்படியே நம்பி ஏமாறக்கூடாது.. ஒவ்வொரு தகவலையும் வேறு வழிகளில் சரிபார்ப்பது மோசடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க உதவும்" என்று எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக