தூத்துக்குடி மாவட்டம் 15.08.2021
தூத்துக்குடி அருகே உள்ள எட்டயாபுரம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை இழிவுபடுத்தியும், வன்முறையை தூண்டும் வகையில் வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு பரப்பியவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி ய செய்தியாவது:-
எட்டயாபுரம் பகுதியில் இன்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை பற்றி இழிவுபடுத்தியும், இருவேறு சமுதாயங்களுக்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்று வாட்ஸ் ஆப் மூலம் குழுக்களில் பரவியது.. பகிர்வு களை பார்த்த வாட்ஸ்அப் ல் உள்ளோர் அதிர்ச்சியானார்கள்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் இடம் உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையில் உதவி ஆய்வாளர் முருகன் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை பரபரப்பானார்கள்.
பின்பு வாட்ஸ் அப்-ல பதிவிட்ட வரை கண்டுபிடித்தனர். சிறுவன் என்பது அதிர்ச்சி யை தந்தது.
எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த இளஞ்சிறுவன் ?...ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை இழிவுபடுத்தியும், சமுதாய வன்முறையை தூண்டும் வகையில் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பியது தெரியவந்தது,
உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக