தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
தூத்துக்குடி, ஜூன் 30:
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆம்னி பஸ் நிலையப் பகுதியில் செல்போன் கேட்டு ஏற்பட்ட தகராறில் இளைஞரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி,
நேற்று முன்தினம் (29.06.2026) இரவு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே ஆம்னி பஸ் நிறுத்தம் பகுதியில் பேருந்தில் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த அஜய் தேவகுமரன் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரிடம் செல்போன் கேட்டதாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த திருநங்கை கையில் வைத்திருந்த கத்தியால் அஜய் தேவகுமரனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வடபாகம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட அஜய் தேவகுமரன் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலையத்தில் குற்ற எண் 583/2026-ன் கீழ் BNS சட்டப்பிரிவுகள் 296(b), 109(1), 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்வாதாரம் இன்றி யாசகமாக பணம் கேட்டு தொந்தரவு செய்யும் திருநங்கைகள் !!!
தூத்துக்குடி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் பஸ் ல வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் -கடை வியாபாரிகளிடம் பணம் கேட்டு வருவதும் தரவில்லை என்றால் தொந்தரவு செய்து வருவதாக கூறப்படுகிறது .
இஃது விஷயத்தில் மாவட்ட காவல்துறை தகுந்த அறிவுரைகளை கூறி திருநங்கைகள் வாழ்வதாரம் மற்றும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது
செய்தி புகைப்படம் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது மாடலிங்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக