செவ்வாய், 3 செப்டம்பர், 2024

திருநங்கை, திருநம்பி க்கு சலுகைகள் முக்கிய அறிவிப்பு இந்திய அரசு வெளியீடு முழு விவரம் பார்க்க

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

3-9-2024 photo news 

by Arunan journalist 

திருநங்கை, திருநம்பி, LGBTQI சமூகம் சார்ந்தவர்களுக்கு இஃது வரை இல்லாத புதிய சலுகைகள் அங்கீகாரம் சில முக்கிய அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.



இது பற்றிய செய்தியாவது :-


 சமூக நீதி மற்றும் மேம்பாடு துறை அமைச்சகத்தின் தேசியத் திருநர் கவுன்சிலின் தென்னிந்திய பிரதிநிதி

கல்கி சுப்ரமணியம் M.A JMC, M.A Intl.Rlns.,

இது தொடர்பாக செய்தி குறிப்பு  வெளியீட்டு உள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:-


  1.  Department of Food and Public Distribution (D/oF&PD) -

இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை (D/oF&PD) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது,


ரேசன் கார்டு!!!

 தற்போதுள்ள விதிகளின்படி LGBTQI உறவில் உள்ள பயனர்கள் (சேர்ந்து வாழ்பவர்கள்) ரேஷன்அட்டை மூலம் பொருட்கள் மற்றும் அதன் சேவைகள் பெறுவதற்காக ஒரே குடும்பத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவார்கள்.


 மேலும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ரேஷன் கார்டுகளை வழங்குவதில் சேர்ந்து வாழும் உறவில் உள்ள பயனர்கள் மீது எந்தவித பாகுபாடும் காட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை (D/oF&PD) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது, கேட்டுக் கொண்டுள்ளது. 



வங்கி கணக்கு!!

2. Department of Financial Services (DFS) -

இந்திய அரசின் நிதிச் சேவைகள் துறை (DFS) ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது, திருநங்கைகள், திருநம்பிகள் உட்பட LGBTQI சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டு வங்கிக் கணக்கைத் (Joint account) திறப்பதற்கும், கணக்கில் உள்ள நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு சேர்ந்து வாழும் உறவில் உள்ள ஒருவர் அவரின் குயர் பார்ட்னரை நாமினியாக/வாரிசுதாரராக பரிந்துரைக்க எந்தத் தடையும் இல்லை. இது ஒன்றாக சேர்ந்து குடும்பமாக வாழும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆகியோருக்கும் பொருந்தும். வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில் அந்த வங்கிக் கணக்கில் வாரிசு என அவர் யாரை நியமித்திருக்கிறாரோ அவர் மீதி கணக்குத் தொகையை பெற முடியும். 



இறப்பின் போது!!!

3. Ministry of Health and Family Welfare -

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து துறைகளுக்கும் LGBTQI+ சமூகத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதங்களை அனுப்பியுள்ளது.


 அதன்படி  சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறையில் உள்ள பல்வேறு நிலை ஊழியர்களுக்கு LGBTQI சமூகத்தினர் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளித்தல், பாலின உறுதி அறுவை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தவறான மாற்று சிகிச்சைகள் வழங்குவதை தவிர்த்தல்,  


LGBTQI சமூகத்தின் ஒருவர்  இறக்கும்போது அந்த நபரின் ரத்த சொந்தங்கள் இல்லாதபோது அல்லது உடலை பெற விரும்பாதபோது அவரின் திருநங்கைகள் திருநம்பிகள் உட்பட LGBTQI சொந்தங்கள் உடலைக் கோருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் தொடர்பாக உரிமைகளை உறுதி செய்து கடிதம் எழுதியுள்ளது. 

சுகாதாரம்!!!

4. The Directorate General of Health Services, Ministry of Health and Family Welfare -

இந்திய அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் பிற துறைகளுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மருத்துவ, சுகாதார சேவைகளை உறுதி செய்தல் மற்றும் LGBTQI+ சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டைக் குறைத்தல் குறித்து அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மனநலம் !!!

5. Ministry of Health and Family Welfare -

உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சிசுக்கள்/பாலின வேறுபாடு (இன்டர்செக்ஸ்) குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவ ரீதியாக சிக்கல்கள் இன்றி இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான மருத்துவ தலையீடு தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.


 தற்போது LGBTQI சமூகத்தின் மனநலம்/நல்வாழ்வு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.



மேலும் திருநங்கைகள் திருநம்பிகள் உட்பட LGBTQI சமூகங்கள் நலன் தொடர்பாக மேலும் எடுக்கப்பட வேண்டிய  நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் பகிருமாறு பொதுமக்களை இந்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அழைத்துள்ளது. 


இது தொடர்பான உங்கள் கருத்துக்களையும், பரிந்துரைகளையும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்: abhishek-upsc@gov.in மற்றும் mayank.b@gov.in. 


- கல்கி சுப்ரமணியம் M.A JMC, M.A Intl.Rlns.,

தென்னிந்திய உறுப்பினர், தேசிய திருநர் கவுன்சில்,

மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சகம். 

தொடர்புக்கு: +91 7639741916

news by 

ரோஜா அருணன்

செய்தியாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக