# தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு விருப்பமனுக்கள் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ் பி சண்முகநாதன் இடம் தொழிற் சங்க நிர்வாகிகள் வழங்கினர் .
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி, செப். 2:
தூத்துக்குடி மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அண்ணா தொழிற்சங்கத்தின் காலாவதியான நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க விருப்பமனுக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி நகர், புறநகர், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் ஆகிய ஐந்து பணிமனைகளிலும் ஓய்வுபெற்ற மற்றும் இயற்கை எய்திய நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தொழிலாளர்களிடமிருந்து விருப்பமனுக்களை வாங்கிக் கொண்டார்.
## ஒற்றுமையாக செயல்பட வேண்டும் - எஸ் பி சண்முகநாதன்
இந்த நிகழ்வில் உரையாற்றிய அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், "அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்.
நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதற்கு தீவிரமாக உழைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில்,
"அதிமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக தொழிலாளர் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக