தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி
தூத்துக்குடி மாநகராட்சியில் 16 வது பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
தூத்துக்குடி மாநகராட்சியின் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம், மாநகராட்சி மேயர்ரீ ஜெகன் பெரியசாமி தலைமையிலும், புதிய ஆணையர் பிரியங்கா இஆப., முன்னிலையிலும் இன்று (03.09.2025) காலை 11.30 மணியளவில் வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
முக்கியமாக,....
சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல்,
பெயர் மாற்றங்கள்,
பிறப்பு – இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
முகாமில் பங்கேற்றவர்கள், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து உடனடியாக பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.
புதிய ஆணையராக பொறுப்பேற்ற பிறகு, ஆணையர் பிரியங்கா கலந்து கொண்ட முதல் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் என்பதால், பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இது வரை இன்று பொதுமக்கள் தரப்பில் இருந்து 24மனுக்கள் பெறப்பட்டன.
இடம்: வடக்கு மண்டல அலுவலகம், தூத்துக்குடி
நாள்: புதன்கிழமை, 03.09.2025





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக