தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி –
மே 28, 2025
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் மக்கள் சேவையில்...
தூத்துக்குடி, மே 28:
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி உலகப் பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது.
“தனிஒருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்” என பாரதியார் பாடியது போல, உலகளவில் பட்டினியால் ஏற்படும் மரணங்கள், உயிர்க்கொல்லி நோய்களால் நிகழும் மரணங்களை விட அதிகம் என ஐ.நா. அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க நாள்தோறும் 2,100 கலோரி உணவுகள் தேவைப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாளை நினைவுகூரும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் திருமதி A.அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., அவர்களின் தலைமையில், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
அவைகள்:
- மேட்டுப்பட்டி உப்பளத் தொழிலாளர்களுக்கு காலை உணவு
- அரசு மருத்துவமனை முன் வாயிலில் காலை உணவு
- தெப்பக்குளம் Truthful Trust குழந்தைகள் மையத்தில் காலை உணவு
- சிலுவைப்பட்டி பார்வையற்றோர் கருணை இல்லத்தில் காலை உணவு
- தாளமுத்துநகர் தொழுநோய் மருத்துவமனையில் மதிய உணவு
- புதிய பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் மக்களுக்கு மதிய உணவு
- மேட்டுப்பட்டி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய அன்னதானம்
இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு மக்களுடன் உணவு பகிர்ந்து, சமூக பொறுப்பை உணர்த்திய தினமாக மாற்றினர்.
– தூத்துக்குடி லீக்ஸ் 📰
**






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக