புதன், 28 மே, 2025

தூத்துக்குடியில் திடீர் சூறாவளி காற்று – மாநகராட்சியில் மரங்கள் சாய்ந்து விழுந்தன

செய்தி புகைப்படங்கள் 

தமிழன் ரவி (முத்த பத்திரிகையாளர்)


தூத்துக்குடியில் திடீர் சூறாவளி காற்று – மாநகராட்சியில் மரங்கள் சாய்ந்து விழுந்தன

தூத்துக்குடி, மே 28:
தூத்துக்குடியில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்று மக்கள் சாலைகளில் அச்சத்தை ஏற்படுத்தியது. மாநகராட்சி எல்லைக்குள் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.



முக்கியமாக, ஸ்டேட் பாங்க் காலனி சாலையில் (DSF செல்லும் சாலை) கடும் காற்றினால் ஒரு பெரிய மரம் முறிந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது. காருக்கு பெரிதும் சேதம் ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கிறது.



சம்பவ இடத்தில் மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.

ஓடிந்து கிடந்த மரத்தில் காக்கா கூடு
 அதில் காக்கா குஞ்சு இருந்தது


மாநகராட்சி பகுதிகளில் புயல் எச்சரிக்கை இல்லாத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் சூறாவளி, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக