புதன், 28 மே, 2025

தூத்துக்குடியில் வேகதடை அமைப்பை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம்



தூத்துக்குடியில் வேகதடை அமைப்பை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகரில் பாதுகாப்பு நடவடிக்கையாக சில முக்கிய சாலைகளில் வேகதடை அமைக்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

தேதி: 02.06.2025, திங்கள்கிழமை
நேரம்: காலை 10 மணி
இடம்: அண்ணாசிலை முன்பு, தூத்துக்குடி




இந்தப் போராட்டத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.


 தேவர்புரம் ரோடு (ஜெயம் சூப்பர் மார்க்கெட் முன்பு) மற்றும் பாலவிநாகர் கோவில் தெரு முகப்பில் வேகதடைகள் அமைக்கRepeated repeated repeated repeated வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

அலட்சியமாக செயல்படும் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டிக்கும் விதமாக, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் இந்தப் போராட்டத்தை நடத்துகிறது.

சமத்துவ மக்கள் கழகம் - தூத்துக்குடி மாவட்டம்
மாலைசூடி அற்புத ராஜ்
மாவட்டச் செயலாளர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக