புதன், 28 மே, 2025

மோடியிடம் நேரடியாக முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை!சாதிப் பெயர்களில் உள்ள இழிவை ஒழியுங்கள்!

Tamil Nadu updates

செய்தி தொகுப்பு Arunan journalist 

மாண்­பு­மிகு இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­களை நேரில் சந்­தித்து ஒரு கோரிக்­கையை வைத்­துள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் ஸ்டாலின்



இது பற்றிய செய்தியாவது:-


‘பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும்’ என்­பது வள்­ளு­வம். இரத்த பேதம்இல்லை, பால் பேதம் இல்லை என்­பது பெரி­யா­ரி­யம். 


இதற்­கா­கவே இயக்­கம்தொடங்­கி­னார் தந்தை பெரி­யார். இழிவுபடுத்­து­தல் என்­பது சொற்­க­ளில் இருந்து தொடங்­கு­வ­தாக அவர் கரு­தி­னார். சூத்­தி­ரச் சொல்­லுக்கு... 

எதி­ரானபோராட்­டத்தை தனது இறு­தி­நா­ளில் மூத்­தி­ரச் சட்­டி­யைத் தூக்­கிக் கொண்­டும் உழைத்­தார்.


நீதிக்­கட்சி ஆட்சி அதற்­கும் முன்

 வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க சில அர­சா­ணை­க­ளைப் பிறப்­பித்­தது. பஞ்­ச­மர், பறை­யர் என்ற சொற்­களை நீக்­கும் ஆணையை வெளி­யிட்­டது.


 நீதிக்­கட்சி ஆட்சி. அரசு ஆணை எண் 817 சட்­டம் (பொது) நாள் 25.3.1922 மூலம் பஞ்­ச­மர், பறை­யர் என்று தொல் திரா­வி­டர் குடி­யி­னரை அழைக்­கும், எழு­தும் மரபை நிறுத்­திற்று. தமி­ழில் ‘ஆதி திரா­வி­டர்’ என்­றும் தெலுங்­கில் ‘ஆதி ஆந்­தி­ரர்’ என்­றும் அவர்­க­ளைக் குறிப்­பி­ட­வேண்­டும் என்று ஆணை பிறப்­பித்­தது.


‘’ At the meeting of the Legislative Council held on the 20th January 1922, the following resolution was passed. “That this council recommended to the government that the terms ‘Panchamas’ or ‘Paraya’ used to designate the ancient dravidian community in Southern India should be deleted from Government records c., and the term ‘Adi-Dravida’ in the Tamil and ‘Adi-Andhra’ in Telugu districts e substitute instead”என்­பது ..


அந்த அர­சா­ணை­யா­கும். சொற்­களை நீக்­கு­தல் மட்­டு­மல்ல; அனைத்­தை­யும் அனை­வர்க்­கு­மான ஆக்­கும் பல்­வேறு அர­சா­ணை­களை நீதிக்­கட்சி ஆட்சி பிறப்­பித்­தது. இதன் தொடர்ச்­சி­யாக இயங்­கி­னார் தந்தை பெரி­யார்.

அடி என்ற முழக்கம்!!!

தந்தை பெரி­யா­ரும், அவர் தம் நண்­பர் கைவல்­ய­மும் ஒரு திரு­மண வீட்­டில் உணவு உண்டு கொண்­டி­ருந்­த­போது, ‘சூத்­தி­ரன் குடித்த குவ­ளை­யைத் தொடாதே’ என்று ஒரு­வன் சொன்­னான். 


சோத்­துக் கையால் அவன் முகத்­தில் அறைந்­தார் கைவல்­யம். ‘சூத்­தி­ரன் என்று சொன்­னால் ஆத்­தி­ரம் கொண்டு அடி’ என்ற முழக்­கம் அதில் இருந்­து­தான் வந்­தது.


1927 ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசு விளம்­ப­ரத்­தில் ‘சூத்­தி­ராள்’என்ற சொல் இருந்­தது. 


இத­னைக் கண்­டித்து அறிக்கை வெளி­யிட்­டார் தந்தை பெரி­யார். மாநா­டு­க­ளில் தீர்­மா­னம் போடப்­பட்­டது. ‘சூத்­தி­ராள்’ என்று போடப்­பட்­டி­ருந்த விளம்­ப­ரங்­கள் சில இடங்­க­ளில் நீக்­கப்­பட்டு வரு ­வ­தாக ‘குடி­அ­ரசு’ (16.10.1927) இத­ழில் செய்தி வெளி­யாகி உள்­ளது. 

சூத்திரன் என்ற சொல் நிறுத்தம்!!!

இதன்­பி­றகு நீதிக்­கட்சி ஆட்சி சூத்­தி­ரன் என்ற சொல்லை நீக்கி உத்­த­ர­விட்­டது. அதன்­பி­றகு ஆவ­ணங்­க­ளில் சூத்­தி­ரன் என்ற சொல்லை பயன்­ப­டுத்­து­வது நிறுத்­தப்­பட்­டது.


1957 ஜூலை 11 அன்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் பேசிய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், “சாணான், வண்­ணான் என ‘ன்’ போட்டு அவ­மா­னப்­ப­டுத்­தும் வகை­யில் இருக்­கி­றது. இதனை நீக்கி ‘ர்’ போட வேண்­டும்” என்று கோரிக்கை வைத்­தார். அப்­போது குறுக்­கிட்ட  காங்கிரஸ் அமைச்­சர் கக்­கன், “மத்­திய அர­சில் அப்­ப­டித்­தான் இருக்­கி­றது. ‘ன்’ போடு­வ­தால் இழிவு ஏற்­பட்டு விடாது” என்று பதில் அளித்­தார்.


தி.மு.க. ஆட்­சி­யில் இதற்கு முற்­றுப்­புள்ளி வைத்­தார் முத­ல­மைச்­சர் கலை­ஞர். 10.12.1975 அன்று முத­ல­மைச்­சர் கலை­ஞர் ஒரு அர­சாணை வெளி­யிட்­டார். சாதிப் பெயர்­க­ளில் இருந்த ‘ன்’ நீக்­கப்­பட்டு, ‘ர்’ என மாற்­றப்­பட்­டது. “சாத்­தி­ரத்­தின் பேர்­க­ளி­லும் சரித்­தி­ரம் படைக்க முடி­யும் என்­பதை நிரூ­பித்­தோம்” என்று முத­ல­மைச்­சர் கலை­ஞர் குறிப்­பிட்­டார்.


"இதோ இப்­போ­தும் இழிவு நீக்­கும் போராட்­டத்­தைத் தொடர்ந்து செய்து வரு­கி­றார் 

திரா­விட மாடல் முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் "


தமிழ்­நாடு சட்­டப்­பே­ர­வை­யில் 29.04.2025 அன்று உரை­யாற்­றிய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­

“இந்த மண்­ணின் ஆதிக் குடி­களை இழி­வு­ப­டுத்­தும் அடை­யா­ள­மா­கக் காலனி என்ற சொல் பதி­வா­கி­யி­ருக்­கி­றது. 


ஆதிக்­கத்­தின் அடை­யா­ள­மா­க­வும் தீண்­டா­மைக்­கான குறி­யீ­டா­க­வும் வசைச் சொல்­லா­க­வும் இது மாறி­யி­ருப்­ப­தால் இனி இந்­தச் சொல் அரசு ஆவ­ணங்­க­ளி­லி­ருந்­தும், பொதுப் புழக்­கத்­தி­லி­ருந்­தும் நீக்­கு­ வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்”என்று அறி­வித்­தார்.


இத­னைத் தொடர்ந்து மாண்­பு­மிகு இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­களை நேரில் சந்­தித்து ஒரு கோரிக்­கையை வைத்­துள்­ளார் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் ஸ்டாலின் .....


“தமிழ்­நாட்­டின் மக்­கள் தொகை­யில் கிட்­டத்­தட்ட ஐந்­தில் ஒரு பங்­காக (1/5) ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் மக்­கள் உள்­ள­னர், தமிழ்­நாட்­டின் சாதிப் பெயர் பட்­டி­ய­லில் 76 ஆதி­தி­ரா­வி­டர் சாதிப் பெயர்­க­ளும், 37 வகை­யான பழங்­கு­டி­யி­னர் சாதிப் பெயர்­க­ளும், அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றுள்ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் சமூ­கங்­க­ளைச் சேர்ந்த பெரும்­பான்­மை­யான மக்­கள் தங்­கள் சாதிப் பெய­ரில் இறுதி எழுத்து ‘N’ மற்­றும் ‘A’ என முடி­வ­தால், சாதிப் பெயரை ஒரு­மை­யு­டன் குறிப்­பி­டு­வ­தாக இருப்­ப­தா­க­வும் 



எனவே சமூ­கத்­தில் உரித்த பெருமை கிடைக்­கப் பெற­வில்லை என கூறி ‘N’ மற்­றும் ‘A’ என்­ப­தற்­குப் பதி­லாக ‘R’ என பெயர் மாற்­றம் செய்து தங்­க­ளுக்குஉரிய மரி­யா­தை­யைப் பெற்­றுத் தரு­மாறு அர­சி­டம் கோரிக்கை வைத்த வண்­ணம்உள்­ள­னர். தமிழ்­நாடு அரசு மேற்­கா­ணும் சாதி­க­ளில் உரிய பெயர் மாற்­றம் செய்ய சட்­ட­மி­யற்­று­மாறு இந்­திய அர­சைக் கேட்­டுக் கொண்­டுள்­ளது. 


எனவே, ஆதி­தி­ரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் பட்­டி­ய­லில் உள்ள சாதிப் பெய­ரில் இறுதி எழுத்­தில் முடி­வ­டை­யும் ‘N’ மற்­றும் ‘A’ என்­ப­தற்­குப் பதி­லாக ‘R’ என பெயர் மாற்­றம் செய்து மக்­க­ளுக்கு உரிய மரி­யா­தையை கிடைக்க வழி செய்­யும்வண்­ணம் உரிய சட்­டம் இயற்ற, விரை­வில் நட­வ­டிக்கை மேற்­கொள்ள கேட்­டுக்கொள்­ளப்­ப­டு­கி­றது”என்­ப­து­தான் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் வைத்த கோரிக்­கை­யா­கும்.


டெல்­லிப் பய­ணம் என்­பது நிதி கேட்­கும் பய­ணம் மட்­டு­மல்ல; நீதி கேட்­கும் பய­ணம் ஆகும். ‘திரா­விட மாடல்’ ஆட்சி என்று ஏன் சொல்­கி­றோம் என்­றால்இத­னால்­தான். ‘திரா­விட’ என்று சொன்­னால் சில­ருக்கு ஏன் எரி­கி­றது என்­றால்இத­னால்­தான். இதை­யெல்­லாம் பேசு­வ­தற்கு இந்த இயக்­கம்­தான் இருக்­­கிறது என்ற கோபம்­தான் கார­ணம். இவர்­கள் இத­னைத் திரும்­பத் திரும்ப பேசு­கி­றார்­களே என்ற ஆத்­தி­ரம்­தான் கார­ணம்.


நன்றி - முரசொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக