வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி கலெக்டர் புகைப்படம் மூலம் ஆன்லைன் மோசடி முயற்சி 21 வயது இளைஞர் கைது நடந்தது என்ன ?

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, பிப். 13:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட முயன்ற இளைஞரை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நடித்து, அவர்களின் புகைப்படத்தை Display Picture ஆக வைத்து பல போலியான வாட்ஸ்அப் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட உதவியாளர் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இக்கணக்குகள் மூலம் பொதுமக்களிடம் பணம் கோரப்பட்டதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சைபர் கிரைம் விசாரணை 

புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் தொழில்நுட்ப ரீதியான தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

உத்தரப்பிரதேச இளைஞர் கைது – சைபர் குற்றப்பிரிவு அதிரடி நடவடிக்கை


விசாரணையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் குமார் (21) என்பவர், மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி பல போலியான வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்கி, பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

சிறை !!!

இதனையடுத்து, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 09.02.2026 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்று அனுஜ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் 12.02.2026 அன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி போலியான கணக்குகள் மூலம் மோசடி செய்ய முயன்ற குற்றவாளியை தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.

thoothukudileaks


பொதுமக்களுக்கு எச்சரிக்கை:

அரசு அதிகாரிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பணம் கோரப்பட்டால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியில் ...

செயற்கை தொழில்நுட்பம் பயன் படுத்தப்பட்ட புகைப்படம் (மாதிரி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக