பள்ளி 🏫 மாணவிகளுக்கு
பாலியல் தொந்தரவு மறைக்க முயற்சி யில் பள்ளி நிர்வாகம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடி போக்சோ வில் விளையாட்டு ஆசிரியர் கைது நடவடிக்கை
அதனை தொடர்ந்து தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரும் கைது செய்யப்பட்டு ள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் :12.11.2024
இது பற்றிய செய்தியாவது
விளையாட்டு ஆசிரியர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை க்கு வந்த பாலியல் புகார்!!!
மாணவிகளை அழைத்து சென்ற இடத்தில் விளையாட்டு ஆசிரியர் மதுபானம் வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு
திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு தூத்துக்குடி க்கு அழைத்து சென்ற இடத்தில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், மேலும் அந்த தனியார் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்காமல் மறைப்பதாகவும் தெரிய வந்தது
சம்பவம் உண்மை!!!
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி சம்பவம் உண்மை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
போக்சோ சட்டத்தில் கைது!!
இதனையடுத்து மேற்படி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான உடன்குடி கிறிஸ்டியானகரம் பகுதியைச் சேர்ந்த பொன்சிங் (42) என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மூடி மறைக்க முயன்ற தனியார் பள்ளி மீது காவல் துறை வழக்கு பதிவு
பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளரும் மீது கைது செய்யப்பட்டு உள்ளார்கள்!!!
மேலும் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவத்தை காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்காமல் மறைக்க முயன்ற பள்ளியின் முதல்வர் மற்றும் பள்ளியின் செயலாளர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக