திங்கள், 11 நவம்பர், 2024

தூத்துக்குடி அதிமுகவின் ஒரே லட்சியம் எடப்பாடி யாரை முதல்வர் ஆக்குவேன் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் சூளுரைத்தார்

தூத்துக்குடி 2024 நவம்பர் 12

ஆலோசனை கூட்டம் 

வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம்-2025, புதிய வாக்காளர் சேர்த்தல் சிறப்பு முகாம்களில் அதிமுகவினர் பணியாற்றுவது குறித்த தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.



 தூத்துக்குடி டூவி புரத்தில் உள்ள  மாவட்ட கழக அலுவலகத்தில்  

தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது 


வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது ,திருத்தம் போன்ற பணிக்காக நடைபெறும்  சிறப்பு முகாம்களில் அதிமுகவினர் செயல்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக எடுத்து கூறினார். 


கவனம்!!!

அதன்படி  புதிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதிலும்,விடுபட்ட, இடம்பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து மீண்டும் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் அதிமுகவினர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எடப்பாடியாரை முதலமைச்சராக்குவதே நம் ஒரே லட்சியம்!!!


 ஒவ்வொருவரும் ஒரு பூத்திற்க்கு குறைந்தது 20 வாக்காளர்களை சேர்ப்பது என்ற ரீதியில் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு எடப்பாடியாரை முதலமைச்சராக்குவதே ஒரே லட்சியமாக கொண்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு 

அதிமுக வெற்றியடைய இரவு ,பகல் பாராமல் உழைக்க வேண்டும் என்றார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர்,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான பிரபு, பகுதி செயலாளர்கள் சேவியர், ஜெய்கணேஷ், தெற்கு பகுதி பொறுப்பாளர் சுடலைமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட சிறுபான்மையினர்  நலப்பிரிவு செயலாளர் கே.ஜே பிரபாகர், திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எஸ்.டி.அருண் ஜெபக்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள்  சுகந்தன்ஆதித்தன், முனியசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், 

மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறைபொருளாளர் பரிபூரண ராஜா, 

வழக்கறிஞர்பிரிவு உதயகுமார், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.கே.மாரியப்பன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன், 

வட்டசெயலாளர்கள் சொக்கலிங்கம், கொம்பையா, ஹார்பர்.பாண்டி, எஸ்.பி. பிரபாகரன், பூர்ண சந்திரன், முருகேசன், உலகநாத பெருமாள், டைமண்ட்ராஜா, செல்வராஜ், மாடசாமி, மாரிமுத்து, மற்றும் சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட 

பலரும் கலந்து கொண்டணர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக