திங்கள், 11 நவம்பர், 2024

பாஜக ஹெச் ராஜா வை கைது செய்யுங்கள் தூத்துக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் புகார் மனு

பொதுமக்கள் மத்தியில் மோதல் போக்கை,

மத வெறுப்பை,

மத துவேஷத்தை,

பிளவு அரசியலை,

பொய் பிரச்சாரங்களை, அவதூறுகளை, 

மத நல்லிணக்கத்திற்கு,

சமூக நல்லிணக்கத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, அனைத்தையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற...!!,

பேசிக் கொண்டிருக்கிற.....!

பாஜகவை சேர்ந்த எச்.ராஜா மீது கைது செய்ய நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாநகர வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்களிடம் மனிதநேய மக்கள் கட்சியின் புகார் மனு அளித்தனர்.


   


                  

நீதி, மதச்சார்பற்ற தன்மை, ஒற்றுமை என்பது நம் சமூகத்தில் அடிப்படை மதிப்புகளாக உள்ளன. 


ஆனால் ?

கடந்த சில தினங்களாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஹெச்.ராஜா  


ஊடகங்களிலும், பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தரம் தாழ்ந்த முறையில் சமூக அமைதியை குலைக்கும் வகையில் தவறான, குரோதமான தகவல்களை பரப்பி....


சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் மற்றும் அதன் மக்களின் மீது ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை மத பகையை தூண்டும் வகையில் பரப்புரை செய்து வருகிறார்.

 

குறிப்பாக, கடந்த நவம்பர் 7 ம் தேதி அன்று சென்னை விமான நிலையத்தில் நடைப்பெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் 


தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாபநாசம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்,அவரை....


 “ஜவாஹிருல்லாஹ் பச்சை தேசத் துரோகி, ஜவாஹிருல்லாஹ் மட்டும் அல்ல திருமாவளவன் எல்லாத்தையும் சேர்த்தே சொல்கிறேன். 


ஏன் என்று சொன்னால்? தீவிரவாதத்திற்காக இராணுவத்தினரால் கொல்லப்பட்ட புர்கான் வானிக்கு இங்கே சென்னையில்  அஞ்சலி கூட்டம் நடத்தியவர்கள் தான் ஜவாஹிருல்லாஹ் வும் திருமாவளவனும். .. 


இந்த மாதிரி தேச விரோதிகள் அந்நிய நாட்டின் கைகூலிகள் நாட்டை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்.


ஜவாஹிருல்லாஹ்வை..

தேசவிரோத சக்திகள் இந்த படத்தை எதிர்க்கின்றேன் என்று நீங்கள் தேச விரோதத்தை பரப்புவதாக இருந்தால் 


தேச பக்தர்கள் நாட்டை நேசிப்பவர்கள்  இந்த தீய சக்திகளுக்கு எதிராக களத்தில் இருக்க வேண்டும்..” என

பதற்றத்தை உருவாக்கும் நோக்கில்

தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளார்.

பொய் பரப்பும் ஹெச் ராஜா

தீவிரவாதத்திற்காக காஷ்மீரில் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானி எனபவருக்காக சென்னையில் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்

வும், விசிக தலைவர் திருமாவளவனும் அஞ்சலி கூட்டம் நடத்தினார் எனவும் பொய்யான செய்திகளை பரப்பி, 


மத துவேஷத்தை தூண்டி சமூகங்களின் இடையில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசியுள்ளார். 



நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை இறப்பு குறித்து .... ஹெச் ராஜா சொன்ன பொய்!!!

இவர் தொடர்ந்து இது மாதிரியான பல்வேறு மத துவேஷ கருத்துக்களை மக்களின் மத்தியில் பரப்புரை  தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. 

 

கடந்த 2021 ஆம் ஆண்டில்...


 ஹெச்.ராஜா  நடிகர் சிவகார்த்திக்கேயனின் தந்தை இறப்பிற்கு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டினை பரப்பி சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கினார். 

தப்பித்தார் ..

ஹெச் ராஜா!!!

பின்னர், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புகார்கள் எழுந்த நிலையில், தான் தவறாக சொல்லி விட்டேன் என கூறி செய்த தவறில் இருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

 

மேலே, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் கருத்துகளும் பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என பரவி சமூகத்தில் மோதல் போக்கினை உண்டாக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. 


இதன் விளைவாக, உண்மையான சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 


இந்த வகையான தவறான தகவல் பரப்புதல் மற்றும் மத அடிப்படையில் எதிர்பாராத வெறுப்பை உண்டாக்கும் செயற்பாடுகள் எந்த சமூகத்தில் இருந்தாலும், 


அது நம் சமூகத்தின் ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் குற்றச்செயலாகும். 

 

 பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா  மீது, தவறான தகவல் பரப்பும், சமூக விரோத கருத்துக்களை ஊக்குவிக்கும், 


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் மீது தேவையற்ற அவதூறு பரப்ப செய்து, 


மக்களுக்கு இடையில் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறார் எனும் குற்றச்சாட்டுகளின் கீழ், தகுந்த வழக்கு பதிவு செய்ய வேண்டும் 


என்று புகார் மனு மனிதநேய மக்கள் கட்சியின் 

மாவட்ட தலைவர் 

H.M. அகமது இக்பால் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி மாநகர வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் இடம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் யூசுப் மாவட்ட செயலாளர் தமுமுக,

சுலைமான் 

மாவட்ட துணைச் செயலாளர் மமக,

அப்துல் சமது மாநகர தலைவர், 

ஷேக் ஜான் ராஜா மாநகர துணை தலைவர், 

மெட்ரோ செக் வர்த்தக அணி, பக்ருதீன் அலி மனித உரிமை மற்றும் நுகர்வோர் அணி ,

அப்துல் ரஹீம் ஐபிபி, அப்சல் தகவல் தொழில் 

நுட்ப அணி,

பிரவீன் மீனவர் அணி, 

மற்றும் முன்னாள்மாநகர தலைவர் ஜாகீர்உசேன்.


திரு.எச்.ராஜா பேட்டி கொடுத்த வீடியோ ஆதாரம்

பென்டிரைவில் காவல் ஆய்வாளரிடம் கொடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக