▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂
news by arunan journalist
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை ஒரு முறை காண விருப்பபட்டனர் பள்ளி மாணவ மாணவிகள்.
அந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக இன்று கனிமொழி எம்பி பள்ளி மாணவ மாணவிகள் உடன் கலந்து உரையாடல் செய்தவாறே பேருந்தில் பயணித்து பார்வையிட சென்றார்.
இது பற்றிய செய்தியாவது:-
பள்ளி மாணவ மாணவிகளுடன் பேருந்தில் குஷியாக பயணித்த கனிமொழி எம்பி ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்வையிட வைத்தார்!
கடந்த ஜூலை மாதம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு இன்பேன்ட் ஜீசஸ் கல்லூரி நிகழ்ச்சி நடைபெற்றது.
கனிமொழி எம்பி இடம் தங்கள் விருப்பம் தெரிவித்த மாணவிகள்!!!
அபபோது,... அக்கல்லூரியில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளி மாணவர்கள் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்திற்கு தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு புத்தகங்கள் வேண்டும் என ...
அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
புத்தம் வழங்கல்!!!
இதனைத் தொடர்ந்து, இன்று (24/08/2024) சனிக்கிழமை, வல்லநாட்டில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பள்ளிக்காக கொடுத்த புத்தகங்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த தொழில் நிறுவனர் எட்வின் சாமுவேல் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் தனது அலுவலகத்தில் இருந்து புத்தகங்களையும் அப்பள்ளிக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, இன்று (24-8-2024) கனிமொழி கருணாநிதி எம்பி . அப்பள்ளியின் மாணவ மாணவிகளை பேருந்தின் மூலமாக அழைத்துச் சென்று ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்வையிட வைத்தார்!
உடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மகிழ்ச்சி யில் மாணவிகள் !!!
இன்று பேருந்தின் மூலமாக அழைத்துச் சென்று ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது தங்கள் உடன் இருந்த கனிமொழி எம்பிக்கு மாணவ மாணவிகள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக