thoothukudileaks 15-10-2023
photo news by
arunan journalist
இடமாற்றம் பணிமாறுதல் பற்றி தூத்துக்குடி கலெக்டர் செந்தில் ராஜ் ஆதங்கம் தெரிவித்து பேசினார்.
இது பற்றிய செய்தியாவது:-
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் ஆக லட்சுமிபதி இ.ஆ.ப.,அவரை நியமனம் செய்துள்ளார்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் கலெக்டர் செந்தில் ராஜ் காலகட்டத்தில் தூத்துக்குடி மற்றும் மாவட்டத்தில் பல சரித்திர முக்கியத்துவமான பல நல்ல நிகழ்வுகள் நடைபெற்றன.
இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் கனிமொழி எம்பி கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் கடம்பூர் ராஜு மார்கண்டேயன் சண்முகையா மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடன் கண்ணியமிக்க நல்ல தொடர்பு இருந்ததால் மக்கள் பணிகளை தொய்வில்லாமல் செய்து வந்தார்
குறிப்பாக தூத்துக்குடிமாவட்ட கனிமொழி எம்பி பேரன்புடன் கனிமொழி எம்பி யின் எண்ணோட்ட அலைவரிசையில் அவரது பணிகளை திறம்படச் செய்ததது பாராட்ட தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் அன்பை அமைதியாக பெற்றிருக்கிறார் இவரின் இடமாற்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் சமுக ஆர்வலர்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு போன்ற பலருக்கு மிக வருத்தம் தந்துள்ளது என்கிறார்கள்.
ஆசிரியர் & மாணவர்களுக்கு கலெக்டர் தனது ஆதங்கமான அட்வைஸ் பரபரப்பு பேச்சு !!!
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில் ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மேல் நிலைப்பள்ளி கூட்டரங்கில் நேற்று 14 10 2023 நடைபெற்றது.
கலெக்டர் செந்தில் ராஜ் பேசுகையில் .. |
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையில் அவர் பேசியதாவது :
இன்றைய தினம் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள அனைத்து
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் தேர்ச்சி சதவிகிதத்தில் அடுத்த முறை முதல் இடத்திற்கு
வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறையில்
தூத்துக்குடியை பற்றி எந்தவிதமான புகாரும் இதுவரை வந்தது கிடையாது.
தூத்துக்குடி க்கு மரியாதை !!!
தூத்துக்குடிக்கு என்று எப்போதும் ஒரு தனி மரியாதை உண்டு.
அரசு துறையில்
பணிபுரிபவர்களுக்கு இடமாறுதல் வழக்கமான ஒன்றுதான்.அரசு பணியில்
பணிபுரியும் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம்தான்.
அரசு செயல்படுத்தக்கூடிய
திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள்
பணியாற்றுவதற்குதான் அரசு பணிக்கு வந்திருக்கிறோம்.ஆசிரியர்கள்
வகுப்பறையாக இருந்தாலும் சரி,தேர்தல் பணியாக இருந்தாலும் சரி
எந்தவொரு சிரமம் பார்க்காமல் பணிபுரிகிறார்கள்.
எனக்கு எனது தாயாருடன்
பள்ளிக்கு சிறு வயதில் சென்றபோது அங்குள்ள ஆசிரியர்கள், கல்வி
அலுவலர்களை பார்த்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது.
கலெக்டரின் ஆசை!!!
அப்போது..
நான் முதன்மை கல்வி அலுவலராக வேண்டும்
ஆசைப்பட்டேன்.
நான் பள்ளியில் முதல் மாணவனாக வந்தபோது ஆசிரியர்
என்னை மருத்துவராக வேண்டும் என்று நம்பிக்கையை தந்தார். அதன்படியே
நான் மருத்துவரானேன். பின்னர் நன்றாக படித்து மாவட்ட ஆட்சியர் ஆனேன்.
சின்ன சின்ன விஷயங்கள் மாணவ, மாணவிகளிடையே தாக்கத்தை
ஏற்படுத்தும். மாணவ, மாணவியர்கள் எல்லோரும் ஆசிரியர்களுக்கு மரியாதை
தர வேண்டும்.
நீங்கள் என்ன யோசிக்க வேண்டும் என்பதைவிட எப்படி
யோசிக்க வேண்டும் என்பதைத்தான் பார்க்க வேண்டும். நீங்கள் நிறைய
விளையாட வேண்டும்.
உங்கள் பள்ளியில் ஏதேனும் குறைகள்
இருக்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
பள்ளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு திட்டப்பணிகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகையால் ஆசிரியர்களாகிய நீங்கள் எப்போதும்
சிறப்பாக செயல்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தைப் பள்ளிக்கல்வித்துறையில்
முதன்மை மாவட்டமாக கொண்டுவர அயராது பாடுபட வேண்டும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., தெரிவித்தார்கள்.
கலெக்டர் செந்தில் ராஜ் விருது வழங்கல்
அடுத்ததாக ..தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,
இ.ஆ.ப., அவர்,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .எல்.ரெஜினி
, தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் .ஏ.குருநாதன்,
கோவில்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் .சு.ஜெயபிரகாஷ்ராஜன்
ஆகியோர்களுக்கும் நல்அளுமை விருதுகளை வழங்கினார்.
பின்னர்
மாநில நல்லாசிரியர்
விருதுபெற்ற 11 ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகளையும்,
12 சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளையும், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற
10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி
பெற்ற 67 பள்ளிகளின் 550 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்கள்
கற்றுத்தரும் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் அதிகமாக பெறவைத்த 36
ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வைத்தார்.
விழாவின் வரவேற்புரையை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல் ஆற்றினார்
இவ் விழாவின் தலைமை உரையாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல். ரெஜினி பேசினார் விழாவின் வாழ்த்துரையாக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மேயர் ஜெகன் சிறப்புரை ஆற்றினார்கள்.
கல்வி அலுவலர்கள் (இடைநிலைக்கல்வி) .குருநாதன் (தூத்துக்குடி),
.ஜெயபிரகாஷ்ராஜன் (கோவில்பட்டி), வேப்பலோடை அரசு மாதிரி
மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் .சேகர், பள்ளிகளின்
தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை அரசு மேல்நிலைப்பள்ளி கீழப்பூவானி தலைமை ஆசிரியர் கஜேந்திர பாபு சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தலைமை ஆசிரியர்கள் கஜேந்திர பாபு,சேகர், கார்த்திகேயன், சிவபிரசாத்,பெர்சியாள் ஞானமணி பொன் சந்தன லதா மற்றும் ஜோயல் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர்கள் இடைநிலை மற்றும் தொடக்கநிலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லொஷிப் உடன் இருந்தனர்.
இந்நிகழச்சியில் ஏராளமான பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக