திங்கள், 16 அக்டோபர், 2023

தமிழர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

thoothukudileaks 16-10-2023

Photo news by sunmugasunthram journalist 


தமிழர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு காரணமாக இருந்தவர் கலைஞர் - அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.



இது பற்றிய செய்தியாவது -

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய மாபெரும் பேச்சுப் போட்டி குறுக்குச்சாலையில் உள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

பின்பு அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: 

புரட்சிக்கரமான வரலாறுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். 

அதற்காக கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் தளபதியார் அறிவுறுத்தலின்படி நடைபெறுகிறது. 


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கருத்துக்கள் கவிதைகள் என பலவற்றின் மூலம் தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். என்பதற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலை குனிந்து எழுதினார். 


1998ல் முதல் முறையாக கனிணித்துறை மூலம் தமிழ்வழிக்கல்வி தொடங்கப்பட்டது. அது தான் இன்று உலக அளவில் தமிழர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

தமிழ் மொழி செம்மொழி உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தவர் கலைஞர் கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களின் வரலாறுகளை இனிவரும் எதிர்கால தலைமுறையினருக்கு தெரிய வேண்டும், 

 மாணவ மாணவிகளுக்கு இப்போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். 


மாநில அரசின் உரிமையை மீட்டெடுத்து, மாநில முதல்வர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்றுக்கொடுத்தது கலைஞர் தான், இப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன், 

இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் என்று பேசினார்.

இவ்விழாவிற்கு மாவட்ட அமைப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். 


மாவட்ட துணை தலைவர் சென்றாயப்பெருமாள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆபிரகாம், மாரிராஜ், சின்னத்துரை, செய்யதுஜாபர், ரஞ்சித்குமார், ஜான்சன்டேவிட், வர்ஷினி, மாநகர தலைவர் மாரிசெல்வம், துணை தலைவர் பெரியசாமி, துணை அமைப்பாளர்கள் பாலகணேஷ், பழனி, சாமுவேல், ஸ்ரீதர், வசந்த் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர அமைப்பாளர் ரூபன் வரவேற்புரையாற்றினார்

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்;ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், வக்கீல் பாலகுருசாமி, கவிதா தேவி, அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண் குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர துணை செயலாளர் பிரமிளா, பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் விஜயகுமார், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், வட்ட செயலாளர் கதிரேசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி தலைவர் பழனி நன்றியுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக